மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 19 ஜுன் 2022

தெரிந்தால் பேசு: சாய் பல்லவிக்கு விஜயசாந்தி அட்வைஸ்!

தெரிந்தால் பேசு: சாய் பல்லவிக்கு விஜயசாந்தி அட்வைஸ்!

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி.

தற்போது தெலுங்கு நடிகர் ராணாவுடன் இணைந்து ‘விராட பர்வம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் நேற்று ரிலீஸ் ஆனது. படத்தில் நக்சலான ராணா டகுபதியை காதலிக்கும் பெண் கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார்.

இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார் சாய் பல்லவி. அப்போது, வன்முறை எழுச்சியை ஊக்குவிக்கும் ஒரு அரசியல் சித்தாந்தத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?” என்ற அரசியல் ரீதியான கேள்வி ஒன்று சாய் பல்லவியிடம் கேட்கப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அவர், கடந்த மார்ச் மாதம் வெளியான ‘காஷ்மீர் பைல்ஸ்’ படத்துடன் தொடர்புப்படுத்தி பதில் அளித்தார்.

காஷ்மீர் பைல்ஸ் படத்தில் காஷ்மீர் பண்டிட்கள் படுகொலை செய்யப்பட்டதைக் காட்சிப்படுத்தியிருப்பார்கள். அது வன்முறை என்றால், சமீபத்தில் பசுவை அழைத்துச் சென்ற இஸ்லாமியர் மீது தாக்குதல் நடத்திவிட்டு ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கூறுமாறு சொன்னதும் தவறுதான் என்று பதில் கூறியிருந்தார். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் என்ன வித்தியாசம்..?என்றும் கேள்வி எழுப்பியிருந்தார் சாய் பல்லவி.

அவரின் இந்த பேச்சுக்கு நாடு முழுவதும் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்து வருகிறது. இதனிடையே காஷ்மீர் பயங்கரவாதிகளை, பசு காவலர்களுக்குச் சமம் என்று ஒப்பிட்டுப் பேசிய சாய் பல்லவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹைதராபாத் சுல்தான் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகையும், பாஜகமுன்னாள் எம்பியுமான விஜயசாந்தி சாய் பல்லவியை கண்டித்துள்ளார். டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கும் நடிகை விஜயசாந்தி, பசுக்கள் கொல்லப்படுவதைக் கேள்வி எழுப்புவதும், காஷ்மீரில் பண்டிதர்கள் கொல்லப்படுவதும் ஒன்றல்ல. நீ கொஞ்சம் சிந்தித்தால் உண்மை புரியும். ஒரு தாய் தன் மகனைத் தவறு செய்ததற்காக அடிப்பதும், ஒரு திருடனைத் திருடியதற்காக அடிப்பதும் ஒன்றா? இப்பிரச்சனை குறித்துத் தெரியாவிட்டால் பேசாமல் இருப்பதே சிறந்தது…என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

-இராமானுஜம்

ட்ரெண்டிங்கில் லீனா மணிமேகலை : என்ன காரணம்?

3 நிமிட வாசிப்பு

ட்ரெண்டிங்கில் லீனா மணிமேகலை : என்ன காரணம்?

சமந்தா போன்று கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி

2 நிமிட வாசிப்பு

சமந்தா போன்று கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி

ஐந்தாவது டெஸ்ட்: 257 ரன்கள் முன்னிலையில் இந்தியா!

4 நிமிட வாசிப்பு

ஐந்தாவது டெஸ்ட்: 257 ரன்கள் முன்னிலையில் இந்தியா!

ஞாயிறு 19 ஜுன் 2022