மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 18 ஜுன் 2022

அனிருத், விஜய் சேதுபதிக்கு கமல் கொடுத்த கிப்ட்!

அனிருத், விஜய் சேதுபதிக்கு கமல் கொடுத்த  கிப்ட்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது விக்ரம் திரைப்படம்.

படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக நடிகரும் தயாரிப்பாளருமான கமல்ஹாசன் படத்தின் வெற்றிக்குக் காரணமாக இருந்தவர்களுக்கு பரிசுகள் வழங்கி இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமான லோகேஷ் கனகராஜுக்கு 'Lexus ES300h' கார், சிறப்பு தோற்றத்தில் நடித்த சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் படத்தின் உதவி இயக்குநர்களுக்கு 'Apache RTR 160' பைக் என பரிசுகளை வழங்கினார்

விக்ரம் படத்தை தனது இசையால் அதிர வைத்த இசையமைப்பாளர் அனிருத்திடம், 'கமல்ஹாசன் உங்களுக்குஎன்ன பரிசுகொடுத்தார்' என்று கேட்டபோது, விக்ரம் படத்தில் வாய்ப்புக் கொடுத்தார் என்று அசரவைக்கும் விதமாகப் பதிலளித்திருந்தார்.

அதேபோன்று விக்ரம் படத்தில் பிரதான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் விஜய்சேதுபதி மாமனிதன் படத்தின் வெளியீட்டையொட்டி செய்தியாளர்களை நேற்று சென்னையில் சந்தித்தபோது விக்ரம் படத்தில் சிறப்பாக நடித்ததற்கு 'கமல் கிப்ட் கொடுத்தாரா?' என்று கேள்வி எழுப்பபட்டது.

அதற்குப் பதிலளித்த விஜய் சேதுபதி, "கமல் சாருடன் நடிக்க வாய்ப்புக் கொடுத்தார். கற்பனையில்கூட கமல் சாருடன் நடிப்பேன் என்று நினைத்துப் பார்த்ததில்லை" இதைவிட எனக்கு என்ன பரிசை அவரால் கொடுக்க முடியும் என்றார்.

-இராமானுஜம்

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

3 நிமிட வாசிப்பு

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

படத்தின் வெற்றி என்பது வசூல் அடிப்படையில் இல்லை – ஆர்.ஜே.பாலாஜி ...

3 நிமிட வாசிப்பு

படத்தின் வெற்றி என்பது வசூல் அடிப்படையில் இல்லை – ஆர்.ஜே.பாலாஜி

உங்களுக்குப் பிடித்தால்தான் எங்களுக்கு வேலையே: ஷிவாங்கி

3 நிமிட வாசிப்பு

உங்களுக்குப் பிடித்தால்தான் எங்களுக்கு வேலையே: ஷிவாங்கி

சனி 18 ஜுன் 2022