மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 17 ஜுன் 2022

அரசியல் காமெடி படத்தில் யோகி பாபு

அரசியல் காமெடி படத்தில் யோகி பாபு

த்ரில்லர், காதல், குடும்ப படம் என ஒவ்வொரு வகை படங்களையும், ஒரு தரப்பினர் ரசிப்பார்கள். காமெடி படங்களை அனைத்து ரசிகர்களும் கொண்டாடுவார்கள்.

காமெடி படங்கள் மனதிற்கு முழுமையான நிம்மதியை தரும். ஆனால், முழுமையாக அனைவரும் ரசிக்கும்படி, வாய்விட்டு சிரிக்கும்படி காமெடி படங்கள் தருவதென்பது எளிதல்ல.

அந்த வகையில் தமிழ் திரையுலகில் அனைவராலும் கொண்டாடப்பட்ட, காமெடி படங்களான ‘ஏ-1’, ‘பாரீஸ் ஜெயராஜ்’ போன்ற படங்களை இயக்கிய கே.ஜான்சன் தனது அடுத்த படத்தை துவங்கியுள்ளார்.

இந்தப் புதிய படத்திற்கு ‘மெடிக்கல் மிராக்கல்’ என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். முழுக்க, முழுக்க காமெடி ஜானரில், தயாராகும் இப்படத்தை எழுதி இயக்குவதோடு, ‘ஏ-1’ புரொடக்சன்ஸ் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார் இயக்குநர் கே.ஜான்சன்.

இப்படத்தில் நாயகனாக தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கிறார். இப்படத்தில் அவர் ஓலா டிரைவர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். தர்ஷா குப்தா நாயகியாக நடிக்கிறார்.இவர்களுடன் மன்சூர் அலிகான், சேசு, கல்கி, மதுரை முத்து, டி.எஸ்.ஆர், நாஞ்சில் சம்பத், கேபிஒய் வினோத், பாலா, டைகர் தங்கதுரை, சித்தார்த் விபின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

முழுக்க முழுக்க அரசியல் காமெடியாக உருவாகவுள்ள ‘மெடிக்கல் மிராக்கல்’ படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இதில் படக் குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடத்த படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

-அம்பலவாணன்

ட்ரெண்டிங்கில் லீனா மணிமேகலை : என்ன காரணம்?

3 நிமிட வாசிப்பு

ட்ரெண்டிங்கில் லீனா மணிமேகலை : என்ன காரணம்?

சமந்தா போன்று கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி

2 நிமிட வாசிப்பு

சமந்தா போன்று கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி

ஐந்தாவது டெஸ்ட்: 257 ரன்கள் முன்னிலையில் இந்தியா!

4 நிமிட வாசிப்பு

ஐந்தாவது டெஸ்ட்: 257 ரன்கள் முன்னிலையில் இந்தியா!

வெள்ளி 17 ஜுன் 2022