மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 16 ஜுன் 2022

இந்தியில் சூரரைபோற்று: சூர்யாவின் ரோல் என்ன?

இந்தியில் சூரரைபோற்று: சூர்யாவின் ரோல் என்ன?

தமிழில் மட்டும் படங்களை தயாரித்து வரும் நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் விக்ரம் மல்ஹோத்ராவுடன் இணைந்து சூரரைப் போற்று படத்தை இந்தியில் சுதா கொங்கரா இயக்கத்தில் ரீமேக் செய்யப் போவதாக அறிவித்தனர்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த படம் 'சூரரைப் போற்று 'கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்தியில் இந்தப் படத்தை விக்ரம் மல்ஹோத்ராவுடன் இணைந்து சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. இதில், அக்‌ஷய் குமார் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக ராதிகா மதன் நடிக்கிறார்.

இந்தி ரீமேக்கில் சூர்யா கேமியோ ரோலில் நடிக்கிறார். இதை உறுதிப்படுத்தும் வகையில், படப்பிடிப்பு தளத்தில் அக்‌ஷய் குமாருடன் இருக்கும்படியான புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டுள்ள சூர்யா, "அக்‌ஷய் சார் உங்களை இந்த படத்தில் வீரராகப் பார்ப்பது எனக்குப் பழைய நினைவுகளை நியாபகப்படுத்துகிறது. நம் கதையை மீண்டும் உயிர்ப்பித்து மிக அழகாக மாறாவாக சுதா கொங்கரா உருவாக்கியுள்ளார். சூரரைப் போற்றுபட இந்தி ரீமேக்கில் எனது கேமியோ ரோலையும், இந்தப் படப்பிடிப்பு குழுவினருடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் மிகவும் மகிழ்ச்சியாக செலவு செய்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்துள்ள அக்‌ஷய் குமார், நன்றி பிரதர், சூரரைப் போற்று போன்ற ஒரு உத்வேகக் கதையின் படப்பிடிப்பின் ஒவ்வொரு தருணத்தையும் விரும்புகிறேன். எங்களின் ஸ்ட்ரிக்ட் கேப்டன் சுதா கொங்கரா இருந்தாலும் சென்னையில் இருப்பது ஒருவகை காதலை வெளிப்படுத்துகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

-இராமானுஜம்

வாழ்க்கை ஒரு கனவுதானே: ஏ.ஆர்.ரஹ்மான்

2 நிமிட வாசிப்பு

வாழ்க்கை ஒரு கனவுதானே: ஏ.ஆர்.ரஹ்மான்

சாய் பல்லவி படத்தை வெளியிடும் சூர்யா ஜோதிகா

2 நிமிட வாசிப்பு

சாய் பல்லவி படத்தை வெளியிடும் சூர்யா ஜோதிகா

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

3 நிமிட வாசிப்பு

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

வியாழன் 16 ஜுன் 2022