மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 ஜுன் 2022

‘சிவாஜி’ வெளியாகி 15 வருடங்கள்: ரஜினியை சந்தித்த ஷங்கர்

‘சிவாஜி’ வெளியாகி 15 வருடங்கள்: ரஜினியை சந்தித்த ஷங்கர்

’சிவாஜி’ படம் வெளியாகி 15 வருடங்கள் நிறைவடைந்ததை அடுத்து இயக்குநர் ஷங்கர், நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்து பேசி இருக்கிறார்.

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஷ்ரேயா ஷரண், விவேக் உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த 2007ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சிவாஜி’. ஏவிஎம் புரொடக்‌ஷன் தயாரித்த இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருந்தார்.

இந்த படம் வெளியாகி இன்றோடு 15 வருடங்கள் நிறைவடைந்து இருக்கிறது. இதனை ஒட்டி இந்த படத்தின் இயக்குநர் ஷங்கர் நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து பேசி இருக்கிறார். இந்த புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதள பக்கத்திலும் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘எப்போதும் எங்கள் ‘சிவாஜி-தி பாஸ்’ ரஜினிகாந்த் சார் தான். படம் வெளியாகி 15 வருடங்கள் ஆனதை ஒட்டி அவரை இன்று சந்தித்ததில் மகிழ்ச்சி. அவருடைய மாறாத எனர்ஜி, அன்பு மற்றும் நேர்மறையான எண்ணங்கள் என்னுடைய நாளை சிறப்பானதாக மாற்றி உள்ளது’ என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருக்கிறார் ஷங்கர்.

இவருடன் இவரது மகளும் நடிகையுமான அதிதி ஷங்கரும் ரஜினிகாந்த்தை சந்தித்து புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். ஷங்கரின் இயக்கத்தில் வெளியான ‘இந்தியன்’ திரைப்படத்தின் கதையில் முதலில் ரஜினி தான் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் கமல்ஹாசன் வசம் போனது. அதற்கு பின்பு, ஷங்கர் மற்றும் ரஜினிகாந்த் முதலில் இணைந்த படம் ‘சிவாஜி’ .

ஷங்கர் ரஜினியை சந்தித்து புகைப்படங்களை பகிர்ந்ததை அடுத்து, மீண்டும் அவருடன் இணைந்து ‘சிவாஜி’ படத்தின் இரண்டாம் பாகம் இந்த தலைமுறைக்கு ஏற்றவாறு எடுங்கள் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஆதிரா

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

புதன் 15 ஜுன் 2022