மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 ஜுன் 2022

திருமணத்திற்கு பிறகு நடிப்பு: நயன்தாரா போட்ட கண்டிஷன்!

திருமணத்திற்கு பிறகு நடிப்பு: நயன்தாரா போட்ட கண்டிஷன்!

திருமணத்திற்கு பிறகு நடிக்க நயன்தாரா சில கண்டிஷன்களை போட முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

நடிகை நயன்தாராவிற்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த வாரம் திருமணம் நடந்தது. மறுவீடு, கோவிலுக்கு செல்வது என பிஸியாக இருக்கிறது இந்த ஜோடி. இந்நிலையில், திருமணத்திற்கு பிறகு நடிப்பை தொடர்வதில் நயன்தாரா சில கண்டிஷன்களை போட இருக்கிறாராம்.

சினிமாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு கம்பேக் கொடுத்த போதே, அதிக அளவிலான கமர்ஷியல் படங்களை தவிர்த்து விட்டு, கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்க கூடிய மற்றும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் நயன்தாரா. அந்த வகையில் தற்போது திருமணத்திற்கு பின்பும் இதையே கடைபிடிக்க உள்ளார்.

மேலும், கதாநாயகர்களுடன் நெருக்கமான காட்சிகள், தேவையில்லாத க்ளாமர் காட்சிகள் போன்றவற்றை முற்றிலும் தவிர்த்து விடும்படி முடிவெடுத்திருக்கிறாராம்.

முன்பு படங்களுக்கு அதிக தேதிகள் ஒதுக்கியது போல இனி செய்ய முடியாது எனவும், இனிமேல், நேரம் கிடைக்கும் போது மட்டும் படங்களில் கவனம் செலுத்த உள்ளதாகவும் நயன்தாரா முடிவெடுத்து இருக்கிறார்.

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. அடுத்து இவர் கதாநாயகியாக நடித்துள்ள 'O2' திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. இது தவிர மலையாளத்தில் அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 'கோல்டு' திரைப்படம், ரெளடி பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படம், இது தவிர பாலிவுட்டில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுடன் 'ஜவான்' திரைப்படம் ஆகியவை இவரது கைவசம் உள்ளது.

ஆதிரா

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

புதன் 15 ஜுன் 2022