மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 ஜுன் 2022

ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை: முதல் நாள் முடிவில் ரூ.43,000 கோடியை எட்டிய ஏலம்!

ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை: முதல் நாள் முடிவில் ரூ.43,000 கோடியை எட்டிய ஏலம்!

ஐபிஎல் ஒளிபரப்பு உரிமைக்கான ஏலம் நேற்று (ஜூன் 12) தொடங்கியது. முதல் நாள் முடிவில் ரூ.43,000 கோடியை எட்டியுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் ஐபிஎல் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2008ஆம் ஆண்டு நடைபெற்ற தொடங்கிய ஐபிஎல் தொடர் தற்போது பல நாடுகளில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் ஐபிஎல் தொலைக்காட்சி, டிஜிட்டல் உரிமத்தை கைப்பற்ற ஒவ்வொரு முறையும் கடும் போட்டி நிலவுகிறது.

முதல் 10 ஆண்டுகளில் சோனி பிக்சர்ஸ் குழுமம் ரூ.8,200 கோடிக்கு ஒளிபரப்பு உரிமையை வாங்கியிருந்தது. அதை தொடர்ந்து கடந்த அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் ரூ.16,347 கோடிக்கு ஸ்டார் இந்தியா, டிஷ்னி நிறுவனம் ஆகியவை தொலைக்காட்சி உரிமம் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை பெற்றது.

2023 முதல் 2027ஆம் ஆண்டு வரையிலான ஆண்டுகளுக்கு ஒளிபரப்பு உரிமையை முதல் முறையாக நான்கு பிரிவுகளாக பிசிசிஐ பிரித்து வழங்குகிறது. ஆசிய துணைக் கண்டத்தில் மட்டும் ஒளிபரப்பு உரிமை, டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமை, 18 போட்டிகளுக்கு டிஜிட்டல் உரிமை இல்லாத ஒளிபரப்பு உரிமை - அதாவது முதல் போட்டி, 4 ப்ளே ஆஃப், டபுள் ஹெட்டர் போட்டிகள் அடங்கும், உலக நாடுகளுக்கான ஒளிரபப்பு உரிமை என நான்கு பிரிவுகளில் வழங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் மும்பையில் நேற்று (ஜூன் 12) காலை 11 மணியளவில் மின்னணு ஏலம் தொடங்கியது. ஏலத்துக்கான டெண்டர் விண்ணப்பம் வாங்கி, அவற்றை சமர்ப்பித்த தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு, இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் ஏலத்தில் பங்கேற்பதற்கான ஆன்லைன் இணைப்பை வழங்கினார்கள்.

நேற்றைய ஏல நாள் முடிவில் இந்த ஒளிபரப்பு உரிமை ரூ.43 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது. அதாவது நான்கு பிரிவுகளில் இரண்டு பிரிவுகளுக்கான ஏலம் மட்டுமே நேற்று முடிந்துள்ளது. 'பேக்கேஜ் 1' - ரூ 23,370 கோடி ரூபாய்க்கும் , 'பேக்கேஜ் 2' - ரூ.19, 680 கோடிக்கும் ஏலம் போனது. அதே நேரத்தில் இந்த இரண்டு ஏலத்திலும் வெற்றி பெற்ற நிறுவனம் எது என்ற தகவல் வெளியாகவில்லை. இன்னும் இரண்டு பிரிவுகளின் ஏலம் மீதம் இருப்பதால் மொத்த வருவாய் சுமார் ரூ.60,000 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஏலத்தில் முகேஷ் அம்பானி (ரிலையன்ஸ்) மற்றும் ஜெப் பெசோஸ் (அமேசான்) ஆகியோர் இந்த ஒப்பந்தத்தைக் கைப்பற்ற கடும் முனைப்பு காட்டி வருகிறார்கள். இவர்களில் ஒருவர் இந்த ஒப்பந்தத்தைக் கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

5 நிமிட வாசிப்பு

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

3 நிமிட வாசிப்பு

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

திங்கள் 13 ஜுன் 2022