மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 10 ஜுன் 2022

'ப்ரின்ஸ்' படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியீடு!

'ப்ரின்ஸ்' படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியீடு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'ப்ரின்ஸ்' படத்தின் பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது.

'டாக்டர்', 'டான்' பட வெற்றிகளை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் 20வது திரைப்படம் அனுதீப் இயக்கத்தில் தமிழ்- தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

நேற்று மாலை படத்தின் முதல் பார்வை மற்றும் படத்தலைப்பு 'ப்ரின்ஸ்' என அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்பு முழுக்க முழுக்க பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் டூரிஸ்ட் கைடாக நடிக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது.

சிவகார்த்திகேயனுக்கு கதாநாயகியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா என்பவர் நடிக்கிறார். படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்து இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. படத்தை இந்த வருடம் விநாயகர் சதுர்த்திக்கு திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

நேற்று மாலை முதல் பார்வை வெளியான நிலையில், இன்று காலை சிவகார்த்திகேயன் கதாநாயகியுடன் இருக்கும்படியான இரண்டாவது பார்வை வெளியாகி உள்ளது.

தமன் இசையில் விரைவில் முதல் பாடலும் வெளியாக இருக்கிறது என படக்குழு அறிவித்துள்ளது. சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்கள் மத்தியில் ப்ரின்ஸ் என்ற செல்ல பெயர் உள்ளது. அதையே இந்த படத்தின் தலைப்பாக வைத்துள்ளனர். தலைப்பின் கீழ் 'யாதும் ஊரே' என்ற டேக் லைனையும் கொடுத்துள்ளனர்.

இந்த படம் தவிர்த்து, சிவகார்த்திகேயன் கைவசம் அடுத்து கமல் தயாரிப்பில் ராஜ்குமார் இயக்கத்தில் ஒரு படம், 'அயலான்' ஆகிய படங்கள் உள்ளன.

ஆதிரா

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

வெள்ளி 10 ஜுன் 2022