மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 7 ஜுன் 2022

கமல்ஹாசன் எழுதிய கடிதம்: நெகிழ்ந்த லோகேஷ் கனகராஜ்

கமல்ஹாசன் எழுதிய கடிதம்: நெகிழ்ந்த லோகேஷ் கனகராஜ்

'விக்ரம்' பட வெற்றிக்காக நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜை பாராட்டி தன் கைப்பட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்து இருக்கக்கூடிய 'விக்ரம்' திரைப்படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் வெளியாகி நான்கு நாட்கள் கடந்துள்ள நிலையில் உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமான வசூலையும் இந்தியாவில் மட்டும் 100 கோடி வசூல் பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி அடைந்துள்ளது.

நான்கு வருடங்களுக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் திரையில் வருகிறார் அதுவும் வெற்றிப்படம் கொடுத்து உள்ளார். நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் அவரை வைத்து படத்தை இயக்கி மாபெரும் வெற்றியை கொடுத்திருப்பது கமல்ஹாசனை மிகுந்த மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. இதன் பொருட்டு தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாக நடிகர் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

அதில், 'அன்பு லோகேஷ், உங்கள் பெயருக்கு முன்னால் 'திரு' போடாமல் விட்டது விபத்தல்ல. திரு. கனகராஜ் அவர்களுக்கு உங்கள் பால் உள்ள உரிமையை நான் எடுத்துக்கொண்டேன். இது நமக்குள் தனிப்பட்ட கடிதம் என்பதால். உங்கள் சாதனைக்கான பதவிக்கான மரியாதை பொது வெளியில் எப்போதும் தொடரும். என் ரசிகர்கள் மற்ற ரசிகர்களைவிட வித்தியாசமாக இருப்பது அவசியம் என்ற என் ஆசை, பேராசை என்றனர் என் விமர்சகர்கள். ஆனால், அதையும் தாண்டி என் முன்னணி ரசிகர் முன்னணி திறைமையாளராகவும் இருப்பது நான் ஆசைப்பட்டதைவிடவும் அதிகம்.

உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை என்பதை நான் உட்பட யார் சொன்னாலும் நம்ப வேண்டாம். யூ டியூப்பை திறந்தால் வார்த்தைகளின் களஞ்சியமே தென்படும். உங்கள் வெற்றி தொடர வாழ்த்துக்கள். விழித்திருங்கள், தனித்திருங்கள், பசித்திருங்கள். உங்கள் அன்ன பாத்திரம் எப்போதும் நிறையும். உங்கள் கமல்ஹாசன்' என அதில் தெரிவித்துள்ளார்.

இந்த கடிதத்தை லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, 'Life Time Settlement Letter' என்று கூறி, 'இதை படித்ததும், இப்போது எவ்வளவு உணர்ச்சி வயப்பட்டு இருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நன்றி ஆண்டவரே!' என கூறியுள்ளார்.

லோகேஷ் கனகராஜூக்கு கமல் எழுதிய இந்த கடிதத்திற்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ஆதிரா

ட்ரெண்டிங்கில் லீனா மணிமேகலை : என்ன காரணம்?

3 நிமிட வாசிப்பு

ட்ரெண்டிங்கில் லீனா மணிமேகலை : என்ன காரணம்?

சமந்தா போன்று கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி

2 நிமிட வாசிப்பு

சமந்தா போன்று கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி

ஐந்தாவது டெஸ்ட்: 257 ரன்கள் முன்னிலையில் இந்தியா!

4 நிமிட வாசிப்பு

ஐந்தாவது டெஸ்ட்: 257 ரன்கள் முன்னிலையில் இந்தியா!

செவ்வாய் 7 ஜுன் 2022