மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 6 ஜுன் 2022

அடுத்த பட இயக்குநர் இவர்தான் : உறுதி செய்த கமல்

அடுத்த பட இயக்குநர் இவர்தான் : உறுதி செய்த கமல்

‘விக்ரம்’ திரைப்படத்திற்கு பிறகு தனது அடுத்த பட இயக்குநரை நடிகர் கமல்ஹாசன் உறுதிப்படுத்தியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்க கூடிய திரைப்படம் ‘விக்ரம்’. கடந்த வாரம் திரையரங்குகளில் நேரடியாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெளியாகி மூன்று நாட்களுக்குள்ளேயே இந்தியாவில் 100 கோடி ரூபாய் வசூலையும் உலகளவில் நூறு கோடிக்கும் அதிகமான வசூலையும் இந்த திரைப்படம் பெற்றுள்ளது.

கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு பிறகு திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் கமல்ஹாசனுடைய திரைப்படம் என்பதாலும் அது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதாலும் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். மேலும் ‘விக்ரம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போதே மதுரை கதை களத்தில் இயக்குநர் இரஞ்சித்- கமல் கூட்டணி உறுதி செய்யப்பட்டது. மேலும் ‘விக்ரம்’ படத்தின் அடுத்த பாகமாக ‘விக்ரம்3’ இயக்குநர் லோகேஷுடனும் உறுதி செய்தார் கமல்ஹாசன். இதுமட்டுமில்லாமல் ‘இந்தியன்2’ பட வேலைகளும் இருக்கிறது. இதனால், எந்த படம் முதலில் தொடங்க இருக்கிறது என்ற குழப்பம் ரசிகர்களிடையே இருந்தது. இப்போது அதை தெளிவுப்படுத்தும் வகையில் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.

தன்னுடைய அடுத்த படம் ’மாலிக்’, ‘டேக் ஆஃப்’ ஆகிய மலையாள படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்க போகிறேன் என சமீபத்தில் விஜய் டிவியில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளார். மகேஷ் நாராயணன் ஏற்கனவே கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ படத்தில் எடிட்டராக பணியாற்றி உள்ளார்.

மேலும் இதன் திரைக்கதையை கமல்ஹாசனே எழுதி இருக்கிறார். 1992ம் ஆண்டு பரதன் இயக்கத்தில் கமல்ஹாசனின் திரைக்கதை, வசனம் மற்றும் தயாரிப்பில் வெளியான ‘தேவர் மகன்’ படத்தின் தொடர்ச்சியாக இது இருக்கும் என கூறப்படுகிறது.

கமல்ஹாசன் தற்போது இதற்கான திரைக்கதை வேலையில் இருக்கிறார்.

ஆதிரா

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

5 நிமிட வாசிப்பு

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

3 நிமிட வாசிப்பு

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

திங்கள் 6 ஜுன் 2022