மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 4 ஜுன் 2022

என் வாழ்நாளில் இதுபோன்ற ரிலீசை பார்த்ததில்லை: கமல்

என் வாழ்நாளில் இதுபோன்ற ரிலீசை பார்த்ததில்லை: கமல்

ரசிகர்களுடன் விக்ரம் படம் பார்த்த கமல்ஹாசன், என் வாழ்நாளில் இதுபோன்ற ஒரு படத்தின் ரிலீசை பார்த்ததில்லை என்று கூறியுள்ளார்.

கமல்ஹாசன் திரையுலக பயணத்தில் விக்ரம் திரைப்படத்தின் வியாபாரம் மூலம் அனைத்து முன்னணி நடிகர்களின் சாதனைகளை முறியடித்து முதல் இடத்துக்கு வந்திருக்கிறார் என நேற்று விக்ரம் வாகை சூடுமா என்ற தலைப்பிட்ட செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

இந்நிலையில், நேற்று இரவு ரசிகர்களுடன் அமர்ந்து விக்ரம் படத்தை பார்த்த கமல்ஹாசன்

இந்த மாதிரி ஒரு ரிலீஸை என் வாழ்நாளில் நான் பார்த்ததில்லை' என படம் குறித்து நெகிழ்ந்துள்ளார்.

1986 ஆம் ஆண்டு வெளியான விக்ரம் படத்தின் இரண்டாம் பாகத்தில் அதே ஆண்டு பிறந்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. பிரமாண்ட முறையில் நேற்று வெளியான விக்ரம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எதிர்மறையான விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தாலும் முதல் மூன்று நாட்களுக்கான டிக்கெட்டுகள் முழுவதும் முன்பதிவில் விற்பனையாகி உள்ளது.

தமிழகத்தில் 650 திரைகளில் இப்படம் வெளியிடப்பட்டுள்ளது. முதல்நாள் படத்துக்கு பிரமாண்ட வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் நேற்றிரவு ரசிகர்களுடன் அமர்ந்து நடிகர் கமல்ஹாசன் படம் பார்த்த பின் செய்தியாளர்களிடம் பேசியபோது, விக்ரம் படத்தை இவ்வளவு தூரம் கொண்டுச் சேர்த்த அனைவருக்கும் நன்றி. ரசிகர்களுடன் உட்கார்ந்து படம் பார்ப்பது என்பது விருதுகளைவிட பெரிது. நாங்கள் எதிர்பார்த்த இடங்களில் எல்லாம் ரசிகர்கள் ரசித்தார்கள்.

படத்துக்கு வரவேற்பு பிரமாதமாக உள்ளது. மரோசரித்திரா முதன்முதலில் ரிலீஸ் ஆனபோது எந்த மாதிரியான பாராட்டுக்கள் எனக்கு ஆந்திராவில் கிடைத்ததோ, அதேமாதிரியான பாராட்டு இப்போதும் அங்கு கிடைத்துள்ளது. தமிழகத்திலும், மும்பையிலும் அதேபோன்று எதிர்பார்ப்புகள் இருந்தன. வெளிநாடுகளை பொறுத்தவரை, அமெரிக்காவில் மட்டும் கிட்டத்தட்ட 2000 பிரிண்டுகள் ரிலீசாகி உள்ளது. இந்த மாதிரி ஒரு ரிலீஸை என் வாழ்நாளில் நான் பார்த்ததில்லை என்று தெரிவித்துள்ளார்.

படத்தை தமிழகத்தில் வெளியிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் நேற்று காலை கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தபோது எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, கமல் சார் கலைப்பயணத்தில் விக்ரம் திரைப்படம் மிகப்பெரும் வசூல் சாதனை நிகழ்த்தும் என குறிப்பிட்டுள்ளார்.

அம்பலவாணன்

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

சனி 4 ஜுன் 2022