மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 2 ஜுன் 2022

டி20 கிரிக்கெட்: இன்று இந்தியா வரும் தென்னாப்பிரிக்க வீரர்கள்!

டி20 கிரிக்கெட்:  இன்று இந்தியா வரும்  தென்னாப்பிரிக்க வீரர்கள்!

ஐபிஎல் போட்டிகளைத் தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் பங்கேற்க தென்னாப்பிரிக்க வீரர்கள் இன்று (ஜூன் 2) இந்தியா வருகின்றனர்.

பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான முதலாவது டி20 போட்டி வருகிற 9ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது. அதைத் தொடர்ந்து இரண்டாவது ஆட்டம் முதல் ஐந்தாவது ஆட்டங்கள் முறையே கட்டாக் (ஜூன் 12ஆம் தேதி), விசாகப்பட்டினம் (14ஆம் தேதி), ராஜ்கோட் (17ஆம் தேதி), பெங்களூரு (19ஆம் தேதி) ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது. அனைத்து ஆட்டங்களும் இரவு 7 மணிக்கு தொடங்கி நடக்கும்.

இதையொட்டி தென்னாப்பிரிக்க வீரர்கள் இன்று (ஜூன் 2) டெல்லி வந்தடைகிறார்கள். இந்திய வீரர்கள் அனைவரும் 5ஆம் தேதி ஒன்றிணைவார்கள் என்று டெல்லி கிரிக்கெட் சங்க இணைச் செயலாளர் ராஜன் மன்சந்தா தெரிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் இரண்டு மாதங்கள் இந்திய வீரர்கள் தொடர்ந்து விளையாடிய நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதையெடுத்து தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய அணி கே.எல்.ராகுல் தலைமையில் களம் இறங்குகிறது. கொரோனா தாக்கம் குறைந்துவிட்டதால் இந்த தொடரில் ரசிகர்கள் முழுமையாக அனுமதிக்கப்படுவார்கள். இதேபோல் வீரர்களுக்கான கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையம் (பயோ பபுள்) உருவாக்கப்படாது. ஆனாலும் அவ்வப்போது கொரோனா மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும்.

-ராஜ்

வாழ்க்கை ஒரு கனவுதானே: ஏ.ஆர்.ரஹ்மான்

2 நிமிட வாசிப்பு

வாழ்க்கை ஒரு கனவுதானே: ஏ.ஆர்.ரஹ்மான்

சாய் பல்லவி படத்தை வெளியிடும் சூர்யா ஜோதிகா

2 நிமிட வாசிப்பு

சாய் பல்லவி படத்தை வெளியிடும் சூர்யா ஜோதிகா

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

3 நிமிட வாசிப்பு

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

வியாழன் 2 ஜுன் 2022