அட்லி- ஷாருக்கான் : படத்தின் தலைப்பு என்ன?

இயக்குநர் அட்லி மற்றும் ஷாருக்கான் இணையும் படத்தின் தலைப்பு குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் ‘ராஜா ராணி’ படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் அட்லி. அதன் பிறகு ‘தெறி’, ‘பிகில்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்தார். தமிழை அடுத்து இப்போது பாலிவுட்டிலும் இயக்குநராக அறிமுகமாகிறார் அட்லி. முதல் படமே பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானுடன் இணைகிறார்.
இடையில் அட்லி- ஷாருக்கான் படம் கைவிடப்பட்டது என தகவல் வந்தது. ஆனால், ‘பீஸ்ட்’ படத்தின் ட்ரைய்லர் வெளியானது போது அட்லிக்கு மிக பிடித்த நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ பட ட்ரைய்லரை அட்லியுடன் சேர்ந்து பார்த்ததாக ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ட்வீட் மூலம் அட்லி- ஷாருக்கான் படம் கைவிடப்பட்டது என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் எனவும் இந்த படத்தின் கதாநாயகியான நயன்தாரா விசாரணை அதிகாரி வேடத்தில் நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது. மேலும் படப்பிடிப்பு புனே உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. படத்தில் சுனில் குரோவர், சானியா மல்கோத்ரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஆர்யன் கைது, ‘பதான்’ படப்பிடிப்பு ஆகியவற்றிற்கு பின்பு ஷாருக்கான் இப்போது மீண்டும் அட்லி படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருக்கிறார்.
ஜூலை முதல் வாரத்தில் படத்தின் தலைப்பு அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. முதலில் ‘லயன்’ என தலைப்பிடப்பட்ட இந்த படத்திற்கு இப்போது ‘ஜவான்’ என மாற்றி இருக்கிறார்கள். படத்தின் தலைப்போடு டீசர் அறிவிப்பும் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
ஆதிரா