மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 1 ஜுன் 2022

வெளியீட்டிற்கு முன்பே கோடியில் 'விக்ரம்' படத்திற்கு வியாபாரம்!

வெளியீட்டிற்கு முன்பே கோடியில் 'விக்ரம்' படத்திற்கு வியாபாரம்!

’விக்ரம்’ திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கும் நிலையில் அதன் வியாபாரம் குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

‘மாஸ்டர்’ படத்திற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ’விக்ரம்’. வரும் ஜூன் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. படத்திற்கான புரமோஷன் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் திரைப்படமாக வெளியாகிறது. முழுக்க முழுக்க ஆக்சன் கதை களத்தை கொண்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் வெளியாவதற்கு ஒருநாளே இருக்கும் நிலையில் சாட்டிலைட் உரிமம் ,டிஜிட்டல் ஓடிடி என இந்த படத்தின் மொத்த வியாபாரம் 200 கோடியை எட்டியுள்ளது. இதனால் பட வெளியீட்டிற்கு முன்பே கோடியில் வசூல் செய்துள்ளது என படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது. இந்த திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை ஹாட்ஸ்டார் நிறுவனமும் சாட்டிலைட் உரிமத்தை விஜய் தொலைக்காட்சியும் பெற்றுள்ளது. நேற்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’விக்ரம்’ படத்திற்கான அனைத்து இறுதிகட்டப் பணிகளும் நிறைவடைந்து படம் தயார் நிலையில் உள்ளது என்பதை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படக்குழுவுடன் இருக்கும்படியான புகைப்படங்களை பகிர்ந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். மேலும் படத்திற்கு யுஏ சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில் திரைப்படத்தின் மொத்த நேரம் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதில் பகத் பாசில் கதாப்பாத்திர பெயர் அமர், விஜய்சேதுபதி கதாப்பாத்திர பெயர் சந்தானம் மற்றும் இன்று சூர்யாவின் தோற்றம் படத்தில் எப்படி இருக்கும் என்பதற்கான முதல் பார்வை போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

ஆதிரா

ட்ரெண்டிங்கில் லீனா மணிமேகலை : என்ன காரணம்?

3 நிமிட வாசிப்பு

ட்ரெண்டிங்கில் லீனா மணிமேகலை : என்ன காரணம்?

சமந்தா போன்று கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி

2 நிமிட வாசிப்பு

சமந்தா போன்று கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி

ஐந்தாவது டெஸ்ட்: 257 ரன்கள் முன்னிலையில் இந்தியா!

4 நிமிட வாசிப்பு

ஐந்தாவது டெஸ்ட்: 257 ரன்கள் முன்னிலையில் இந்தியா!

புதன் 1 ஜுன் 2022