மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 மே 2022

'அய்யா விஜய்': கமல் சொன்ன பதில்!

'அய்யா விஜய்': கமல் சொன்ன பதில்!

நடிகர் விஜய்யுடன் எப்போது நடிப்பீர்கள் என்ற கேள்விக்கு கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'விக்ரம்'. அடுத்த மாதம் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. படத்திற்கான புரோமோஷன் பணிகள் கடந்த மாதமே தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படத்தினை கமல்ஹாசனின் ராஜ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளிலும் பான் இந்தியா திரைப்படமாக இது வெளிவர இருக்கிறது.

இதனால், கொச்சி, மலேசியா என படத்தின் புரோமோஷனுக்காக கமல்ஹாசன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து வருகிறார். நேற்று மலேசியாவில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தது. அதில் பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு நடிகர் கமல்ஹாசன் பதிலளித்தார். அதில் ஒருவர், 'நடிகர் விஜய்யுடன் இணைந்து எப்போது படம் நடிக்க போகிறீர்கள்?' என்ற கேள்வியை கேட்டார். அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், "அய்யா விஜய் நேரம் கொடுத்தால் நிச்சயம் இணைந்து நடிப்பேன்" என சிரித்து கொண்டே கூறினார்.

'அய்யா விஜய்' என நடிகர் விஜய்யை குறிப்பிட்டு கமல்ஹாசன் கூறியுள்ள இந்த பதில் ரசிகர்கள் இடையே இப்போது வைரலாகி வருகிறது. மேலும், 'விக்ரம்3' படத்தில் நடிகர் சூர்யா நிச்சயம் இருப்பார் என்பதையும் கமல்ஹாசன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுமட்டுமில்லாமல், கமல்ஹாசன் மலேசியா எதிர்க்கட்சி தலைவரான அன்வர் இப்ராஹிமை சந்தித்து பேசியுள்ளார். இந்த புகைப்படங்களை பகிர்ந்து அவர் ட்வீட் செய்திருப்பதாவது, ‘அன்வர் இப்ராஹிமை சந்தித்து மதிய உணவு சாப்பிட்டதை விட அவருடன் காந்திஜி குறித்தான பேச்சு தான் அதிகம் இருந்தது. மேலும் காந்திஜி குறித்தான மேற்கோள்கள் குறித்தும் உரையாடினோம். அந்தாச்சாரியாக மாறிய அவை எந்த நாட்டின் இன்றைய அரசியலுக்கும் எப்படி பொருந்தி போகிறது என்பது குறித்தும் பேசினோம். அற்புதமான மதியத்துக்கு நன்றி சார்’ எனவும் கூறியுள்ளார்.

-ஆதிரா

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

திங்கள் 30 மே 2022