மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 மே 2022

'அஜித்துடன் இருப்பது அல்டிமேட்டான விஷயம்'- தயாநிதி அழகிரி!

'அஜித்துடன் இருப்பது அல்டிமேட்டான விஷயம்'- தயாநிதி அழகிரி!

நடிகர் அஜீத் தன் மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா மற்றும் தயாநிதி அழகிரி உடன் இருக்கும்படியான புகைப்படம் இன்று இணையத்தில் வைரலானது. இந்த புகைப்படம் பற்றி தயாநிதி அழகிரி மற்றும் அவரது மனைவியும் பகிர்ந்து இருக்கிறார்கள்.

'வலிமை' திரைப்படத்திற்கு பிறகு ஹெச்.வினோத், போனிகபூர் கூட்டணியில் நடிகர் அஜித் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

வங்கிக் கொள்ளை தொடர்பான கதைக்களமும் ஆக்சன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் இருக்கக் கூடியதாகவும் படம் அமைக்கப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது. முதலில் நடிகர் அஜித்துடன் 20 வருடங்களுக்கு பிறகு நடிகை தபு இணைவதாக இருந்தது. அதன் பிறகு இப்பொழுது நடிகை மஞ்சுவாரியர் அந்த கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். இதனை சமீபத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் மஞ்சுவாரியர் உறுதிப்படுத்தியுள்ளார்.

நடிகர் அஜித் சமூக வலைதளங்களில் அல்லது பொது நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்காத நபர் ஆனால் அவரது புகைப்படங்கள் அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் இருந்தும், ரசிகர்களுடன் பொது வெளியில் சந்திக்கும் பொழுதும் வெளியாகி இணையத்தில் வைரலாகும்

அந்தவகையில் இன்று நடிகர் அஜித் தன் மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா மற்றும் தயாநிதி அழகிரி அவருடைய மனைவி ஆகியோருடன் இருக்கும்படியான புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்த புகைப்படம் குறித்து தயாநிதி அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, ' சும்மாவா சொன்னாங்க அல்டிமேட் ஸ்டார் அப்படின்னு! அவர் நம்முடன் இருக்கும் பொழுது அங்கு நமக்கு வரும் பாசிட்டிவ் எனர்ஜியை விளக்க வார்த்தை இல்லை. மிகுந்த ஆச்சரியத்திற்கு உரிய மனிதர்!!' என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரது மனைவி அனுஷா தயாநிதி அவரும் இந்த புகைப்படத்தை பகிர்ந்து, ' இந்த புகைப்படத்தில் இருக்கும் இரண்டு நடிகர்களின் எனர்ஜியை சினிமா துறைக்குள் யாரும் கொண்டு வரவே முடியாது. அஜித்தின் குடும்பத்தை பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் அனைவரும் சந்தித்த அந்த மாலைப் பொழுதை அல்டிமேட் என்றுதான் குறிப்பிட வேண்டும்' என்று மிகவும் மகிழ்ச்சியாக அந்த புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

ஆதிரா.

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

சனி 28 மே 2022