மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 27 மே 2022

சீதாராமம் வெளியீட்டு தேதி!

சீதாராமம் வெளியீட்டு தேதி!

மலையாள நடிகர் துல்கர் சல்மான் தென்னிந்திய மொழிகளில் கன்னடம் தவிர மற்ற மூன்று மொழிகளிலும் நடித்து வருகிறார். நான்கு வருடங்களுக்கு முன்பு வெளியான மகாநடி படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான துல்கர் சல்மான், தற்போது சீதாராமம் என்கிற தெலுங்கு படத்தில் நடித்து முடித்து விட்டார்.

;இயக்குநர் ஹனு ராகவபுடி என்பவர் இயக்கும் இந்தப் படத்தில் கதாநாயகியாக மிருணாள் தாக்கூர் நடிக்க, முக்கியமான வேடத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், தருண் பாஸ்கர், சத்ரு, பூமிகா சாவ்லா, ருக்மணி விஜய் குமார், சச்சின் கெடேகர், முரளி சர்மா, வெண்ணெலா கிஷோர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்தின் இசை, பாடல் குறித்த முன்னோட்ட விளம்பரங்கள் சமீபத்தில் தயாரிப்பு தரப்பில் வெளியிடப்பட்டன. சமீபத்தில் வெளியிடப்பட்ட முதல் சிங்கிளான ‘ஓ சீதா ஹே ராமா’ என்ற மெல்லிசையில் உருவான காதல் பாடல், இசை விரும்பிகளை மயக்கியது. இந்தப் பாடல் வெளியான சிறிது நேரத்தில், சார்ட் பஸ்டர் ஆனது. இப்போது ஆல்பத்தின் அடுத்தடுத்த பாடல்களுக்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

படத்தின் முன்னோட்டத்தின் மூலம் ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தயாரிப்பாளர்கள், தற்போது படத்தின் வெளியீட்டு தேதியையும் வெளியிட்டுள்ளனர்.

இந்த ‘சீதாராமம்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தில் லெப்டினன்ட் ராம் என்கிற ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். போர் பதற்றம் நிறைந்த எல்லையில் இருக்கும் ஒரு ராணுவ வீரருக்கும் இளம் பெண்ணுக்கும் ஏற்படும் காதலை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது.

-இராமானுஜம்

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

5 நிமிட வாசிப்பு

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

3 நிமிட வாசிப்பு

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

வெள்ளி 27 மே 2022