மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 26 மே 2022

'டாக்டர்' படத்தை தொடர்ந்து 'டான்' படமும் 100 கோடி வசூல்!

'டாக்டர்' படத்தை தொடர்ந்து 'டான்' படமும் 100 கோடி வசூல்!

நடிகர் சிவகார்த்திகேயனின் 'டான்' திரைப்படம் 100 கோடி வசூலை ஈட்டியுள்ளது.

புதுமுக இயக்குநர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் 'டான்'. இந்த மாதம் திரையரங்குகளில் நேரடியாக வெளியானது. கல்லூரியில் மாணவர்களுக்கு டானாக இருக்கும் ஒருவன் தனது தந்தை பாசத்தை புரிந்து கொண்டு தனது லட்சியத்தில் எப்படி வெற்றி அடைகிறான் என்ற ஒரு வரி தான்

டான் கதை.

படத்தின் முன்பாதி கலகலப்பாகவும், பின்பாதி சென்டிமென்ட்டாகவும் நகர்கிறது. இது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் உலகம் முழுவதும் வெளியாகி 100 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது என படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு முன்பு சிவகார்த்திகேயனின் 'டாக்டர்', திரைப்படம் 100 கோடி வசூல் செய்தது. இதனை அடுத்து அவருடைய அடுத்த படமான 'டானும் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வெற்றியை தந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிவகார்த்திகேயன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில், திரையரங்கத்தில் ரசிகர்களின் கொண்டாட்ட வீடியோக்களை பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார்.

ஆதிரா

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

வியாழன் 26 மே 2022