மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 26 மே 2022

தனுஷ் பிறந்தநாளில் 'திருச்சிற்றம்பலம்'?

தனுஷ் பிறந்தநாளில்  'திருச்சிற்றம்பலம்'?

'மாறன்' திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் அடுத்த மாதம் நேரடியாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.

'யாரடி நீ மோகினி' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ், நித்யாமேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா உள்ளிட்ட பலரும் நடித்து இருக்கக்கூடிய திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'.

அனிருத் இசையமைத்திருக்க கூடிய இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து இருக்கிறது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு, பூஜையுடன் தொடங்கியது. இப்பொழுது படப்பிடிப்பு முடிந்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்து படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.

வருகிற ஜூலை மாதம் தனது 39-வது பிறந்தநாளை நடிகர் தனுஷ் கொண்டாட இருக்கும் நிலையில் அவரது பிறந்த நாள் அன்று படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் தனுஷ் ஹாலிவுட்டில் நடித்துள்ள படமான 'தி க்ரேமேன்' ஜூலை மாதம் 22ஆம் தேதி நேரடியாக வெளியாக இருக்கிறது. படத்தை இயக்கிய ரூசோ சகோதரர்கள் தனுஷின் மிகப்பெரிய ரசிகர்கள் என்றும் அவருக்காகவே இந்த கதாபாத்திரத்தை உருவாக்கியதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த படம் மட்டுமல்லாது நடிகர் தனுஷ், செல்வராகவன் இயக்கத்தில் 'நானே வருவேன்', தமிழ் தெலுங்கு பைலிங்குவலாக உருவாகி வரும் 'வாத்தி', அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு படம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் என அடுத்தடுத்து கைவசம் தனுஷ் படங்கள் வைத்துள்ளார்.

ஆதிரா

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

வியாழன் 26 மே 2022