மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 26 மே 2022

ஒன்றியத்தின் தப்பாலே : கமல் விளக்கம்!

ஒன்றியத்தின் தப்பாலே : கமல் விளக்கம்!

கமல்ஹாசன் நடிப்பில் ஜூன் 3 அன்று வெளியாக உள்ள விக்ரம் படத்தில் இடம்பெற்றுள்ள பத்தல பத்தல பாடலில் ஒன்றியம் என்கிற வார்த்தை இடம்பெற்றது. இதுகுறித்து தனக்கேயுரிய கிண்டல் கேலியுடன் பிறரை குழப்பும் வகையில் ஒன்றியம் என்றால் என்ன என புது விளக்கத்தை கூறியுள்ளார் கமல்ஹாசன்.

‘விஸ்வரூபம் 2’ திரைப்படத்திற்குப் பிறகு, நடிகர் கமல்ஹாசன், ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தயாரித்து நடித்திருக்கும் படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சிறப்புத் தோற்றத்தில் சூர்யாவும் நடித்துள்ளனர். மேலும் ஃபகத் ஃபாசில், நரேன், ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், ஷான்வி ஸ்ரீவஸ்தவா என நட்சத்திர கூட்டமே இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘பத்தல பத்தல’ பாடல் வெளியிடப்பட்டு பட்டிதொட்டியெங்கும் எல்லோரும் முனுமுனுக்கும் பாடலாக மாறியது. இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வரும் ஜூன் 3ஆம் தேதி வெளியிடுகிறது. இதை முன்னிட்டு, சென்னை அண்ணாசாலையில் உள்ள ஹயாத் ஓட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று இரவு நடைபெற்றது. இதில், நடிகர் கமல்ஹாசனிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதில், மீண்டும் ‘விக்ரம்’ படத்திற்கு ஏன் இந்த தலைப்பு வைக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், ‘விக்ரம்’ படத்தின் தலைப்பைக் கேட்டது இயக்குநர் லோகேஷ் கனகராஜ்தான் என்றும், 36 ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘விக்ரம்’ படத்தின் சீக்குவல் என்று நம்புவது உங்களுடைய நம்பிக்கை என்றும் தெரிவித்தார்.

மேலும்எனது பல படங்களுக்கு லோகேஷ் கனகராஜ் ரசிகர் என்பதால், ‘சத்யா’ என்று கூட பட தலைப்பு வைத்திருப்பார், ஆனால் இந்தப் படத்திற்கு ‘விக்ரம்’ தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்று நினைத்ததால் அதை வைத்துள்ளார் என்றார்

லோகேஷ் கனகராஜை கேட்காமலேயே ‘விக்ரம் 3’ படத்தை அவர்தான் இயக்குவார் என்று தாம் முடிவு செய்துவிட்டதாக கூறினார்

இந்தப் படத்தின் முதல் சிங்கிளான ‘பத்தல பத்தல’ பாடலில் உள்ள பாடல் வரிகளுக்கு விமர்சனங்களும், எதிர்ப்புகளும் கிளம்பியிருக்கிறதே என்று கேள்வி எழுப்பியபோது, ஒன்றியம் என்ற வார்த்தைக்கு தமிழில் பல வார்த்தைகள் உள்ளது என்றும், பத்திரிகையாளர் ஒன்று சேர்ந்துள்ள இந்தக் கூட்டமும் ஒன்றியம் தான், இயக்குநர்கள் எல்லாம் ஒரு சங்கம் வைத்து நடத்தினால் அதுவும் ஒன்றியம் தான், தயாரிப்பாளர்கள் எல்லாம் சேர்ந்துவைத்துள்ள சங்கமும் ஒன்றியம் தான், இந்த சங்கங்களில் தவறுகள் நடந்தால் படம் பாதிக்கப்படும் அந்த மாதிரி எடுத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்த தினத்தில் ‘விக்ரம்’ படம் வெளியிடப்படுகிறதே என கேட்கப்பட்டதற்கு, அது தற்செயலாக நடந்தது என்றார் கமல்ஹாசன்

-இராமானுஜம்

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

5 நிமிட வாசிப்பு

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

3 நிமிட வாசிப்பு

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

வியாழன் 26 மே 2022