மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 25 மே 2022

'விக்ரம்' புரோமோஷன்: சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கமல்

'விக்ரம்'  புரோமோஷன்: சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கமல்

நடிகர் கமல்ஹாசன் நடித்திருக்கும் 'விக்ரம்' திரைப்படம் அடுத்த மாதம் ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் நேரடியாக வெளியாக இருக்கிறது. 'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து இயக்கும் முதல் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்திருக்கிறது. கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். கடந்த மாதத்தில் இருந்தே விக்ரம் படத்திற்கான பிரமோஷன் வேலையை படக்குழு தீவிரமாக முன்னெடுத்து நடத்தி வருகிறது. அந்த வகையில் ரயில் பெட்டிகளில் 'விக்ரம்' படத்தின் போஸ்டர்கள் இடம்பெற்றிருந்தன.

இதற்குப் பிறகு படத்தின் பிரமாண்டமான இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இது மட்டுமில்லாமல் படத்தின் முன்னோட்டம் பிரான்சில் நடைபெற்ற திரைப்பட விழாவிலும் ஒளிபரப்பப்பட்டு அங்கும் பலரது பாராட்டுகளையும் கவனத்தையும் இந்த படம் பெற்றது.

மேலும் 'விக்ரம்' திரைப்படத்தில் வில்லேஜ் குக்கிங் சேனலை சேர்ந்த சில நபர்கள் நடித்திருப்பதால் அந்த சேனலிலும் கமல்ஹாசன் பட புரமோஷனுக்காக பங்கேற்பார் என்று முன்பு சொல்லப்பட்டது. மேலும் சில யூடியூப் சேனல்களிலும் கமல்ஹாசன் பேட்டி கொடுக்க இருக்கிறார். 'விக்ரம்' படத்தின் உரிமையை விஜய் தொலைக்காட்சி பெற்றிருக்கும் நிலையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் பட புரமோஷனுக்காக கமல்ஹாசன் பங்கேற்றிருக்கிறார். இதற்கான படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அவர் பங்கேற்ற நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.

ஆதிரா

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

புதன் 25 மே 2022