மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 25 மே 2022

'பிகில்' மைக்கேல் ராயப்பன் கதை தனிப்படமாக உருவாகிறதா?

'பிகில்' மைக்கேல் ராயப்பன் கதை தனிப்படமாக உருவாகிறதா?

'பிகில்' படத்தில் நடிகர் விஜய்யின் மைக்கேல் ராயப்பன் கதாப்பாத்திரத்தின் கதையை தனிப்படமாக உருவாக்குவதாக இயக்குநர் அட்லி தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய், நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்த படம் 'பிகில்'. இந்த படத்தில் அப்பா மகன் என இரண்டு வேடத்தில் நடிகர் விஜய் நடித்திருப்பார். இதில் அப்பாவாக வரும் விஜய்யின் கதாபாத்திர பெயர் மைக்கேல் ராயப்பன். மகன் கதாப்பாத்திர பெயர் 'பிகில்'.

'தெறி', 'மெர்சல்' படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக இயக்குநர் அட்லீ நடிகர் விஜய்யுடன் இணைந்த 'பிகில்' படம் விமர்சன ரீதியாக பின் தங்கி இருந்தாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்தப்படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் ப்ரைம் கைப்பற்றிய நிலையில், படத்தில் இருந்து மைக்கேல் ராயப்பனின் வீடியோ காட்சி ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, 'மைக்கேல் ராயப்பனின் முழு கதையை மட்டும் தனி படமாக எடுத்தால் எப்படி இருக்கும்' என ரசிகர்களிடம் கருத்து கேட்டுள்ளது.

இதற்கு, இயக்குநர் அட்லி அந்த வீடியோவை கோட் செய்து 'செஞ்சிட்டா போச்சு' என ட்வீட் செய்துள்ளார். அப்படி மைக்கேல் ராயப்பனின் கதையை மட்டும் தனிப்படமாக எடுத்தால் அந்த படம் நிச்சயம் 'பிகில்' படத்தின் முன்னுரையாக இருக்கும் எனவும், நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் இருக்கும் எனவும் இணையதளத்தில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இயக்குநர் அட்லி தற்போது பாலிவுட்டில் ஷாருக்கான் வைத்து படம் இயக்க உள்ளார். இதற்கு அடுத்து மீண்டும் நடிகர் விஜயுடன் அட்லி இணைவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'விக்ரம்' படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யுடன் அவரது 67வது படத்தில் இணைகிறார் என்பதை சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் விருது விழா மேடை ஒன்றில் உறுதிப்படுத்தினார். லோகேஷ் படத்தை அடுத்தே அட்லி நடிகர் விஜய்யுடன் இணைவார் என்கிறது சினிமா வட்டாரம்.

ஆதிரா

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

5 நிமிட வாசிப்பு

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

3 நிமிட வாசிப்பு

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

புதன் 25 மே 2022