மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 25 மே 2022

தனுஷின் தி கிரேமேன் ட்ரெய்லர்!

தனுஷின் தி கிரேமேன்  ட்ரெய்லர்!

நெட்ஃபிளிக்ஸ் தயாரிப்பில், தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார், எண்ட்கேம், சிவில் வார், போன்ற படங்களை இயக்கிய ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ ஆகிய சகோதரர்களின் இயக்கத்தில் உருவாகி வரும் ஹாலிவுட் படம் ‘தி கிரே மேன்’இந்தப் படத்தில் தனுஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தை ஓ.டி.டி. தளமான நெட்ஃபிளிக்ஸ், சுமார் 1500 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரித்துள்ளது. வரும் ஜூலை 22-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் இந்தப் படம் வெளியாக உள்ளது. நடிகர் தனுஷ் இந்தப் படத்தில் நடித்துள்ளதால், அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது.

ஆக்க்ஷன் மற்றும் துரத்தல் காட்சிகளால் நிறைந்த முன்னோட்டம் மிகவும் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது. இந்த முன்னோட்டத்தில் ஒரு சில விநாடிகளே நடிகர் தனுஷ் தோன்றினாலும், அவரது காட்சி மிரட்டலாக உள்ளது.

-அம்பலவாணன்

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

3 நிமிட வாசிப்பு

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

புதன் 25 மே 2022