மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 25 மே 2022

பெரிய நடிகர்களின் படங்களை மட்டுமே பார்க்கின்றனர்: கே.எஸ்.ரவிக்குமார்

பெரிய நடிகர்களின் படங்களை மட்டுமே பார்க்கின்றனர்: கே.எஸ்.ரவிக்குமார்

கொரோனாவுக்குப் பிறகு திரையரங்குகளுக்கு சென்று பெரிய திரைப் படங்களை மட்டுமே பார்க்கவே மக்கள் விரும்புகின்றனர் என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

21 வயதாகும் சஞ்சய் நாராயணன் என்ற இளைஞர் இயக்கியுள்ள ’மாலைநேரத்து மல்லி பூ’ என்ற திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நேற்று (மே 24) மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், “பாலியல் தொழிலில் இருப்பவர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள ’மாலைநேரத்து மல்லிப்பூ’ படத்தின் சில காட்சிகளும், ட்ரைலரும் திரையிடப்பட்டதை பார்த்தபின் அதை குறிப்பிட்டு பேசிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், ”இந்த சிறு வயதில் இது போன்ற ஒரு கதையை எடுத்து இருப்பது பாராட்டுக்குரியது. படத்தின் காட்சிகளை பார்க்கும்போது சிறப்பான கதை அம்சம் கொண்ட திரைப்படமாக இது இருக்கும் என புரிகிறது.

கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு, பெரிய நடிகர்களின் படங்களை மட்டுமே மக்கள் திரையரங்கிற்கு சென்று கொண்டாட்ட மனநிலையோடு பார்க்கின்றனர். எனவே, இந்த திரைப்படத்தை பெரிய நிறுவனங்கள் மூலம் வெளியிட வேண்டும் அல்லது ஓடிடியில் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும். சிறிய திரைப்படங்கள் ஏராளமாக வரவேண்டும். அந்த திரைப்படங்கள் சிறந்த முறையில் மக்களைச் சென்றடைய வேண்டும்” என்றார்.

-இராமானுஜம்

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

3 நிமிட வாசிப்பு

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

படத்தின் வெற்றி என்பது வசூல் அடிப்படையில் இல்லை – ஆர்.ஜே.பாலாஜி ...

3 நிமிட வாசிப்பு

படத்தின் வெற்றி என்பது வசூல் அடிப்படையில் இல்லை – ஆர்.ஜே.பாலாஜி

உங்களுக்குப் பிடித்தால்தான் எங்களுக்கு வேலையே: ஷிவாங்கி

3 நிமிட வாசிப்பு

உங்களுக்குப் பிடித்தால்தான் எங்களுக்கு வேலையே: ஷிவாங்கி

புதன் 25 மே 2022