மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 24 மே 2022

இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்?

இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்?

'பீஸ்ட்' படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தன்னுடைய 66ஆவது திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கான முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்த நிலையில் இப்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இந்த படத்தை தமிழில் கார்த்தியை வைத்து 'தோழா' படம் இயக்கிய இயக்குநர் வம்சி இயக்கி வருகிறார்.

'பூவே உனக்காக', 'காதலுக்கு மரியாதை' போன்ற விஜய் படங்களை போல இதுவும் குடும்ப கதையாக இருக்கும் என முன்பு ஒரு பேட்டியில் தயாரிப்பாளர் தில் ராஜு மனம் திறந்தார். இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தானா நடிக்கிறார். படத்தில் நடிகர் சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் நடிகர் பிரகாஷ்ராஜ் இணைந்துள்ளார். 'கில்லி' படத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து நடிகர் விஜய்யுடன் பிரகாஷ்ராஜ் இணைந்துள்ளார். இது குறித்து புகைப்படத்தை பகிர்ந்து 'ஹாய் செல்லம்ஸ்ஸ், we are back' என ட்வீட் செய்துள்ளார் பிரகாஷ்ராஜ். இதை இணையத்தில் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் சமீபத்தில் நடிகர் விஜய் தெலங்கானா முதல்வரை சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. அந்த புகைப்படத்தில் விஜய் இளைமையான தோற்றத்துடன் காணப்பட்டார். ஆனால் இப்பொழுது பிரகாஷ்ராஜுடன் இருக்கும் புகைப்படத்தில் வயதான கெட்டப்பில் இருக்கிறார். ஏற்கனவே 'தளபதி 66' படப்பிடிப்பில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்பொழுது முதலமைச்சருடன் இருக்கும் புகைப்படம் மற்றும் பிரகாஷ்ராஜுடன் இருக்கும் புகைப்படங்களை ஒப்பிட்டு நடிகர் விஜய் இரண்டு வேடங்களில் நடிப்பது உறுதி என ரசிகர்கள் இணையத்தில் தகவல்கள் பரப்பி வருகின்றனர்.

ஆதிரா

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

3 நிமிட வாசிப்பு

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

படத்தின் வெற்றி என்பது வசூல் அடிப்படையில் இல்லை – ஆர்.ஜே.பாலாஜி ...

3 நிமிட வாசிப்பு

படத்தின் வெற்றி என்பது வசூல் அடிப்படையில் இல்லை – ஆர்.ஜே.பாலாஜி

உங்களுக்குப் பிடித்தால்தான் எங்களுக்கு வேலையே: ஷிவாங்கி

3 நிமிட வாசிப்பு

உங்களுக்குப் பிடித்தால்தான் எங்களுக்கு வேலையே: ஷிவாங்கி

செவ்வாய் 24 மே 2022