மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 24 மே 2022

சிம்பு தான் வேணும்: ஸ்ரீநிதி

சிம்பு தான் வேணும்: ஸ்ரீநிதி

சின்னத்திரை நடிகையான ஸ்ரீநிதி, நடிகர் சிம்புவைத் திருமணம் செய்ய விரும்பி அவரது வீட்டின் முன் தர்ணா போராட்டத்தில் இறங்கியதாக அவரே செய்தியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘7சி’ என்ற தொடரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், ‘யாரடி நீ மோகினி’, ‘புதுப்புது அர்த்தங்கள்’ போன்ற தொடர்களில் நடித்த நடிகை. கடந்த சில நாட்களாக சிம்புவை முன் வைத்து பல சர்ச்சைகளில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் சிம்பு குறித்து மீம் ஒன்றை பதிவிட்டிருந்த ஸ்ரீநிதி, “ஒரு நாள் எல்லாருக்கும் திருமணம் ஆகியிருக்கும். நானும் சிம்புவும் மட்டும்தான் சிங்கிளா இருப்போம்…” என அதில் குறிப்பிட்டிருந்தார். இதைப் படித்த ஒருவர், “நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமே” என்று கமென்ட் போட, “இதுவும் நல்லாத்தான் இருக்கு” என பதிலளித்திருந்தார் ஸ்ரீநிதி.

இது பேச்சோடு பேச்சாக அப்படியே இணையத்திலேயே இருக்கும் என்று நினைத்தால் நிலைமை கட்டுக்கடங்காமல் போய் விட்டது. நடிகை ஸ்ரீநிதி இதை சீரியஸாகவே எடுத்துக் கொண்டு நடிகர் சிம்புவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளக் கோரி அவரது வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்டதாக அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

அதில், “சிம்பு எனக்காக இத்தனை ஆண்டுகள் சிங்கிளாக இருந்திருக்கிறார் என்பதை என்னால் நம்பவே முடியல. இன்னைக்குத்தான் புரிஞ்சது சிம்பு. எல்லாரும் எங்களை சேர்த்து வைங்க ப்ளீஸ். எனக்கு லேட்டாதான் புரிஞ்சது. ஆனால் புரிஞ்சிருச்சு. சிம்புவைத் தவிர வேறு யாரையும் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். ஜல்லிக்கட்டுக்கு மட்டும்தான் போராட்டமா? லவ்வுக்கெல்லாம் போராட்டம் இல்லையா..? இப்போது என் போனில் 4 சதவீதம்தான் சார்ஜ் உள்ளது. ப்ளீஸ் வாங்க. பர்ஸ்ட்டு சிம்பு வேணும். நெக்ஸ்ட் தண்ணி வேணும். கோவமா இருக்காரு. அவரை மட்டும் புரிஞ்சிக்கணுமா? நம்மள புரிஞ்சிக்க மாட்டாரா?

ப்ளீஸ் வாங்க. வந்து சேர்த்து வைங்க. இப்போ கத்துறதுக்கு என்கிட்ட எனர்ஜி இல்ல. எனக்கு அவ்ளோ ஒர்த்து இருக்குன்னு இவ்ளோ வருஷமா எனக்கே தெரியல. புரிய வச்சிட்டாரு சிம்பு. வேணும், அவரை இப்பவே நான் பார்க்கணும்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதிவுக்கு இணையதளவாசிகள் ஸ்ரீநிதியை கிண்டல் செய்து வருகின்றனர்.

-இராமானுஜம்

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

3 நிமிட வாசிப்பு

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

படத்தின் வெற்றி என்பது வசூல் அடிப்படையில் இல்லை – ஆர்.ஜே.பாலாஜி ...

3 நிமிட வாசிப்பு

படத்தின் வெற்றி என்பது வசூல் அடிப்படையில் இல்லை – ஆர்.ஜே.பாலாஜி

உங்களுக்குப் பிடித்தால்தான் எங்களுக்கு வேலையே: ஷிவாங்கி

3 நிமிட வாசிப்பு

உங்களுக்குப் பிடித்தால்தான் எங்களுக்கு வேலையே: ஷிவாங்கி

செவ்வாய் 24 மே 2022