மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 23 மே 2022

'நம்ம மதுரை சிஸ்டர்ஸ்' : சாயாசிங் இடத்தில் யார்?

'நம்ம மதுரை சிஸ்டர்ஸ்' :  சாயாசிங் இடத்தில்  யார்?

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'நம்ம மதுரை சிஸ்டர்ஸ்' தொடரில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த நடிகை சாயாசிங் அந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் 'நம்ம மதுரை சிஸ்டர்ஸ்' என்ற புது சீரியல் ஒளிபரப்பானது. அம்மா அப்பா இல்லாத 4 அக்கா தங்கைகள் ஒரு குடும்பமாக வசித்து வருகிறார்கள். அதில் மூத்த அக்கா குடும்பத்தை வழிநடத்தி அவள் தன் தங்கைகளுடன் எப்படி இந்த சமூகத்தை எதிர்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறார் என்பது தான் இந்த சீரியலின் கதை.

இதில் அக்கா கதாபாத்திரத்தில் நடிகை சாயாசிங் நடிக்க, தங்கைகள் கதாபாத்திரத்தில் சங்கவி, ஐரா அகர்வால், சுனிதா ஆகியோர் நடித்து வருகின்றனர். சீரியல் ஒளிபரப்பு தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு மாதங்களே முடிவடைந்துள்ள நிலையில் இந்த சீரியலில் இருந்து நடிகை சாயாசிங் விலகியுள்ளார்.

இதுகுறித்து சேனல் தரப்பும், சாயாசிங் தரப்பும் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் அவர் சீரியலில் இருந்து விலகியது உண்மைதான் என்கிறது சின்னத்திரை வட்டாரம். அவருக்கு பதிலாக அவருடைய கதாபாத்திரத்தில், ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் 'நீ வருவாய் என' சீரியலில் கதாநாயகியான சுருதி லக்ஷ்மி நடிக்க இருக்கிறார். இவருடைய எபிசோட் அடுத்த வாரம் புதன்கிழமையில் இருந்து ஒளிபரப்பாக இருக்கிறது.

'திருடா திருடி', 'அருள்' உள்ளிட்ட படங்களில் நடித்த சாயாசிங் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் முக்கியமான கதாபாத்திரத்தில் மட்டும் நடித்து வருகிறார். சின்னத்திரையில் 'ரன்', இப்பொழுது சன் டிவியில் 'பூவே உனக்காக' உள்ளிட்ட தொடர்களில் நடித்து வந்தார். கதாநாயகியாக 'நம்ம மதுரை சிஸ்டர்ஸ்' சீரியலில் இந்திராணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தற்போது திடீரென விலகி இருப்பது குறித்து எந்த ஒரு காரணமும் சொல்லவில்லை.

மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'உங்களது வார்த்தை எங்கு மதிப்பிடப் படவில்லையோ அங்கே மவுனம் என்பது தான் சிறந்த பதில்' என்று அவர் பகிர்ந்து இருப்பது அவரது ரசிகர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஆதிரா

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

திங்கள் 23 மே 2022