மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 22 மே 2022

ரஜினி பட ஹீரோயின்கள்: சர்ச்சையான ஆர்.ஜே.பாலாஜியின் பேச்சு!

ரஜினி பட ஹீரோயின்கள்: சர்ச்சையான  ஆர்.ஜே.பாலாஜியின் பேச்சு!

ரேடியோ தொகுப்பாளரும், நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி நிகழ்ச்சியொன்றில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படங்களில் நடித்திருக்கும் பெண் கதாபாத்திரங்களைக் குறிப்பிட்டு விமர்சித்திருப்பது சர்ச்சைக்குரியதாகியுள்ளது.

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தற்போது ‘பதாய் கோ’ என்ற இந்தி படத்தின் தமிழ் பதிப்பாகத் தயாராகி வரும் ‘வீட்ல விசேஷம்’ என்ற படத்தை நடித்து, இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி தனியார் கல்லூரியொன்றில் சமீபத்தில் நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆர்.ஜே.பாலாஜி, நடிகர் ரஜினிகாந்த் நடித்த படங்களில் பெண்களைத் தவறாக சித்தரித்துள்ளனர் என்று குற்றம்சாட்டிப் பேசியுள்ளார்.

ஆணும் பெண்ணும் சமம் என்கிற கருத்தையும் பள்ளி, கல்லூரிகளில் ஆணும் பெண்ணும் பேசிக் கொள்ளக் கூடாது என்று பிரித்து வைப்பது தவறு என்கிற கருத்தையும் முன் வைத்து பேசும்போது, “நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘மன்னன்’ மற்றும் ‘படையப்பா’ உள்ளிட்ட படங்களில் பெண்களை ரொம்பவும் தவறாகக் காட்டியதுதான் இன்றைய தலைமுறையில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே மிகப் பெரிய வேற்றுமை உருவாகக் காரணமாக அமைந்துள்ளது.

படையப்பா படத்தில் வீட்ல வேலை செய்ற பொண்ணு நல்லவ, வெளிநாட்டில் படிச்சிட்டு வரும் பொண்ணு கெட்டவ என்று சொல்லியிருப்பாங்க. மன்னன் படத்தில் நல்லா படிச்சுட்டு கம்பெனி நடத்துற விஜயசாந்தியை கெட்டவங்க. வீட்ல காபி போட்டு கொடுக்கிற குஷ்புவை நல்லவங்களா காட்டியிருப்பாங்க" என்று சொல்லியிருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி.

இந்தப் பேச்சு ஆர்.ஜே.பாலாஜி மீது ரஜினி ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆர்.ஜே.பாலாஜியை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

-இராமானுஜம்

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

3 நிமிட வாசிப்பு

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

படத்தின் வெற்றி என்பது வசூல் அடிப்படையில் இல்லை – ஆர்.ஜே.பாலாஜி ...

3 நிமிட வாசிப்பு

படத்தின் வெற்றி என்பது வசூல் அடிப்படையில் இல்லை – ஆர்.ஜே.பாலாஜி

உங்களுக்குப் பிடித்தால்தான் எங்களுக்கு வேலையே: ஷிவாங்கி

3 நிமிட வாசிப்பு

உங்களுக்குப் பிடித்தால்தான் எங்களுக்கு வேலையே: ஷிவாங்கி

ஞாயிறு 22 மே 2022