மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 20 மே 2022

சினிமாவையும் அரசியலையும் பிரித்ததில்லை: கமல்

சினிமாவையும் அரசியலையும் பிரித்ததில்லை: கமல்

விக்ரம் படத்தில் சூர்யா இடம் பெற்றது குறித்து நடிகர் கமல் மனம் திறந்துள்ளார்.

'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் 'விக்ரம்'.

அடுத்த மாதம், ஜூன் மூன்றாம் தேதி திரையரங்குகளில் நேரடியாக வெளியாக இருக்கிறது. கடந்த வாரம் படத்தின் ட்ரைய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாகச் சென்னையில் நடைபெற்றது. படத்தின் முன்னோட்ட காட்சிகள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தின் முன்னோட்ட காட்சி பிரான்சில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒளிபரப்ப இருக்கிறது. இதற்காக கமல்ஹாசன் தற்போது பிரான்ஸ் சென்றிருக்கிறார்.

அங்கு படம் தொடர்பாக, ஃபிலிம் கம்பேனியன் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் 'லோகேஷ் கனகராஜ் முதலில் 'விக்ரம்' என்ற தலைப்பை மீண்டும் பயன்படுத்த விரும்புவதாகக் கூறி படத்தின் ஒரு வரி கதை சொன்னபோதே பிடித்துவிட்டது. அதன்பிறகு என்னுடைய ஐடியாவையும் சொன்ன போது, லோகேஷ் கனகராஜ் தன்னுடைய வழக்கமான பாணியில் கதையை டெவலப் செய்தார்.

படத்தில் சூர்யாவின் கதாபாத்திரத்திற்காகக் கடைசி நேரத்தில் தான் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் உடனே ஒத்துக் கொண்டு இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்தார். அவருடைய கதாபாத்திரம் தான் 'விக்ரம்' படத்தின் மூன்றாம் பாகத்திற்கான ஒரு தொடக்கமாக அமையும்' என்றார்.

மேலும் அவரிடம் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் என பல திறமையான நடிகர்கள் இருக்கும்போது உங்களுக்குப் போட்டி இருக்கும் என்று நினைத்தீர்களா என்று கேட்கப்பட்டது.

இதற்கு கமல்ஹாசன், 'கண்டிப்பாகத் திறமையானவர்கள் யார் என்னுடன் நடித்தாலும் அவர்களைப் போட்டியாகத் தான் பார்ப்பேன்' என்று கூறினார்.

மேலும் பழைய 'விக்ரம்' படத்திற்கும் இந்த படத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்று கேள்விக்கு, அதற்கு கமல்ஹாசன், 'பழைய 'விக்ரம்' படத்தில் உள்ள ஒரு சம்பவம் இந்த புதிய 'விக்ரம்' படத்திலும் இருக்கும். அது ஒன்று மட்டுமே பழைய விக்ரமுக்கும் இப்போதுள்ள விக்ரமுக்கும் உள்ள தொடர்பு' என்று கூறினார்.

மேலும், 'பத்தல பத்தல' பாடலின் அரசியல் வரிகள் சர்ச்சைக்குள்ளானது பற்றி கேள்வி எழுப்பப்பட்ட போது, 'நான் எப்போதும் சினிமாவையும் அரசியலையும் பிரித்ததில்லை. என்னுடைய பல படங்களிலும் வெளிப்படையாகவே அரசியல் பேசி இருக்கிறேன்' என்று கூறினார்.

ஆதிரா

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

வெள்ளி 20 மே 2022