மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 20 மே 2022

ரஷ்யாவில் கார்த்தியின் கைதி!

ரஷ்யாவில் கார்த்தியின் கைதி!

வித்தியாசமான கதைக் களங்களில் தொடர்ச்சியாக படங்களைத் தயாரித்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘கைதி’.

நடிகர் கார்த்தியின் அசாத்திய நடிப்பில் உருவான இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இதில் நரேன், அர்ஜுன் தாஸ், பேபி மோனிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

முன்னணி நாயகனான கார்த்தி நடித்த இந்தப் படத்தில் நாயகி கிடையாது. பாடல்கள் கிடையாது உள்ளிட்ட பல புதுமையான விஷயங்கள் இந்தப் படத்தில் கையாளப்பட்டது. கார்த்தியின் திரையுலக வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக அமைந்த படம் ‘கைதி’

2015, அக்டோபர் 25-ம் தேதி வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ஒரு படத்துக்கு வரவேற்பு கிடைப்பது என்பது மிகவும் அபூர்வம். அது இந்தக் ‘கைதி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நிகழ்ந்தது.

இதன் தொடர்ச்சியாக தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ‘கைதி’ திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இதன் இந்தி வடிவம் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனின் நடிப்பில் ‘போலா’ என்ற பெயரில் தயாராகி வருகிறது.

தற்போது மேலும் ஒரு மைல் கல்லாக ரஷ்யாவிலும் 'கைதி’ படம் வெளியாகிறது.

'உஸ்னிக்’ என்ற பெயரில் ரஷ்யாவின் 121 நகரங்களில் 297 திரையரங்குகளில் இத்திரைப்படம் ரஷ்ய மொழியில் வெளியாகிறது.

தமிழ்த் திரைப்படம் ஒன்று ரஷ்யாவில் பிரமாண்டமான முறையில் வெளியாவது இதுவே முதல் முறையாகும். இதற்காக பல்வேறு விளம்பரப்படுத்தும் நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளது. இந்த ‘உஸ்னிக்’ படத்தினை ரஷ்யாவில் ‘4 சீசன்ஸ் கிரியேஷன்ஸ்’ என்ற பட வெளியீட்டு நிறுவனம் வெளியிடுகிறது.

- இராமானுஜம்

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

வெள்ளி 20 மே 2022