மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 20 மே 2022

கேன்ஸ் பட விழாவில் ரஞ்சித்தின் வேட்டுவம்!

கேன்ஸ் பட விழாவில் ரஞ்சித்தின் வேட்டுவம்!

கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ், நீலம் ஸ்டுடியோ தயாரிப்பில் பா.இரஞ்சித் எழுதி இயக்கும் ‘வேட்டுவம்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் கேன்ஸ் பட விழாவில் வெளியிடப்பட்டது.

இயக்குநர் பா.இரஞ்சித் படங்கள் இயக்குவதோடு தயாரிப்பாளராகவும் உள்ளார். தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, ரைட்டர் ‘குதிரைவால்’ உள்ளிட்ட படங்கள் அவரது தயாரிப்பில் வெளிவந்தன.

இதனை தொடர்ந்து சேத்துமான், பொம்மை நாயகி, ஜெ.பேபி உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்கு தயாராக இருக்கின்றன. இந்நிலையில் பா.இரஞ்சித் ‘நீலம் ஸ்டுடியோ’ எனும் புதிய தயாரிப்பு நிறுவனத்தையும் துவங்கியிருக்கிறார் .இந்த நிறுவனத்தோடு கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தங்களது முதல் தயாரிப்பாக இயக்குநர் பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் ‘வேட்டுவம்’ என்னும் படத்தைத் தயாரித்து வருகிறது.

இந்த ‘வேட்டுவம்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் கேன்ஸ் பட விழாவில் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வில் இயக்குநர் பா.இரஞ்சித், தயாரிப்பாளர்கள் அபயானந்த் சிங், பியுஷ் சிங், சவுரப் குப்தா, அதிதி ஆனந்த், அஸ்வினி சவுத்ரி மற்றும் பரூல் சிங் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

-இராமானுஜம்

வாழ்க்கை ஒரு கனவுதானே: ஏ.ஆர்.ரஹ்மான்

2 நிமிட வாசிப்பு

வாழ்க்கை ஒரு கனவுதானே: ஏ.ஆர்.ரஹ்மான்

சாய் பல்லவி படத்தை வெளியிடும் சூர்யா ஜோதிகா

2 நிமிட வாசிப்பு

சாய் பல்லவி படத்தை வெளியிடும் சூர்யா ஜோதிகா

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

3 நிமிட வாசிப்பு

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

வெள்ளி 20 மே 2022