மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 19 மே 2022

லெஜண்ட் சரவணாவால் குழப்பமான சூர்யா ரசிகர்கள்!

லெஜண்ட் சரவணாவால் குழப்பமான சூர்யா ரசிகர்கள்!

தனது கடை தொடர்பான விளம்பரங்களில் மட்டுமே நடித்து வந்த சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன், தற்போது இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் ‘தி லெஜண்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் ஹீரோவாக அறிமுகமாவதோடு தயாரிப்பாளராகவும் களம் இறங்குகிறார் சரவணன்.

இந்தப் படத்தில் இந்தி நடிகை ஊர்வசி ரவுட்டேலா நாயகியாக நடிக்கிறார். மேலும் இந்தப் படத்தில் மறைந்த நடிகர் விவேக், நடிகர்கள் மயில்சாமி, பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.

சமீபத்தில், இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரும் ‘மொசலோ மொசலு’ முதல் பாடலும் வெளியானது. இந்தப் பாடலை, தமிழ், தெலுங்கின் லெஜண்ட் இயக்குநர்களாகப் பார்க்கப்படும் மணிரத்னம், ராஜமெளலி, இயக்குநர் சுகுமார் ஆகியோர் வெளியிட்டு ஆச்சர்யமூட்டினர்.

இந்த நிலையில் 'தி லெஜண்ட்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தத் திரைப்பட விழாவுக்குச் செல்வதற்கு முன்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய ஊர்வசி, தமிழில் அறிமுகமாகி இருப்பதில் மகிழ்ச்சி என்றும், கேன்ஸில் 'தி லெஜண்ட்' படத்தின் போஸ்டரின் வெளியீட்டு விழாவுக்கு அழைக்கப்பட்டதற்கு பெருமைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

கேன்ஸ் பட விழாவில் வெள்ளை நிற கவுனில் ரெட் கார்பட்டில் நடிகை ஊர்வசி ரவுட்டேலா நடந்து வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிற சூழலில் ‘வாடிவாசல்’ என்று தொடங்கும் இந்தப் படத்தின் இரண்டாவது பாடல் வரும் மே 20ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது.

இந்த அறிவிப்பு வெளியானவுடன் ட்விட்டரில் வாடிவாசல் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங் ஆனதால் குழப்பமான சூர்யா ரசிகர்களும் இதே ஹேஷ்டேக்கில் விக்ரம் படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் புகைப்படங்களையும் வாடிவாசல் கெட்டப்புகளையும் பதிவிட்டு வருகிறார்கள்.

-இராமானுஜம்

சினிமாவில் அறிமுகமாகும் செந்தில் மகன்!

2 நிமிட வாசிப்பு

சினிமாவில் அறிமுகமாகும் செந்தில் மகன்!

மாதவன் பேச்சு சர்ச்சையும் மயில்சாமி அண்ணாதுரை விளக்கமும்

9 நிமிட வாசிப்பு

மாதவன் பேச்சு சர்ச்சையும் மயில்சாமி அண்ணாதுரை விளக்கமும்

திரௌபதி முர்மு: சர்ச்சை கருத்துக்கு ராம்கோபால் வர்மா விளக்கம்! ...

3 நிமிட வாசிப்பு

திரௌபதி முர்மு: சர்ச்சை கருத்துக்கு ராம்கோபால் வர்மா விளக்கம்!

வியாழன் 19 மே 2022