மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 19 மே 2022

தெலங்கானா முதல்வரைச் சந்தித்த விஜய்

தெலங்கானா முதல்வரைச் சந்தித்த விஜய்

நடிகர் விஜய் முதல் முறையாக தெலுங்குப் படம் ஒன்றில் நடிக்கின்றார். விஜய் 66 என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை தெலுங்கின் முன்னணி இயக்குநர் வம்சிபைடிப்பள்ளி இயக்குகிறார்.

தமன் இசையமைக்கும் இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக நாயகியாக நடிக்கிறார். கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நடிகர் விஜய் தெலங்கானா முதல்வர் சந்திர சேகர்ராவ் அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசியுள்ளார்.

குடும்பக் கதையாக உருவாகி வரும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ஷாம் மற்றும் நடிகர் சரத்குமார், பிரபு உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். ஆகஸ்ட் மாதம் மொத்த படப்பிடிப்பையும் முடித்து 2023ஆம் ஆண்டு பொங்கலையொட்டி ‘விஜய் 66’ படத்தை வெளியிடவுள்ளனர்

- இராமானுஜம்

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

வியாழன் 19 மே 2022