அஜித் 61 படப்பிடிப்பு மற்றும் வெளியீடு எப்போது?

நடிகர் அஜித்தின் அடுத்த படம் குறித்து அதன் தயாரிப்பாளர் போனி கபூர் மனம் திறந்துள்ளார்.
ஹெச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் தனது 61வது படத்திற்காக மூன்றாவது முறையாக இவர்களுடன் இணைந்திருக்கிறார். இதற்கு முன்பு 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை' படங்களுக்காக இந்த கூட்டணி இணைந்தது.
முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லர் கதையாக உருவாகி வரும் இதன் கதைக்களம் வங்கி கொள்ளையை அடிப்படையாக கொண்டது என்கிறார்கள். ஜிப்ரான் படத்திற்கு இசையமைக்கிறார். படத்தில் பாடல்கள் இருக்காது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
படப்பிடிப்பு சென்னையிலும் படத்தின் பெரும்பகுதி ஹைதராபாத்திலும் நடபெறுகிறது. ஹைதராபாத்தில் நடைபெறும் இதன் படப்பிடிப்பில் முதலில் அஜித்துடன் தபு இணைவதாக சொல்லப்பட்டது. ஆனால், பிறகு அந்த கதாப்பாத்திரத்தில் நடிகை மஞ்சு வாரியார் நடிக்கிறார். இதனை தனது சமீபத்திய நிகழ்வு ஒன்றில் அவர் உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில், போனி கபூர் தயாரிப்பில் 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் இந்த வாரம் 20ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்திற்காக ஊடகத்திற்கு பேட்டி அளித்தார் போனி கபூர்.
அதில் 'அஜித்61' படம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், 'படப்பிடிப்பு விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. இதுவரை, 35 நாட்களுக்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ஜூலை அல்லது செப்டம்பருக்குள் படப்பிடிப்பு மற்றும் அதன் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முடிந்து விடும். இந்த வருடம் தீபாவளிக்கு வெளியீடு செய்ய எதிர்ப்பார்த்து இருக்கிறோம். அப்படியே நடக்கும் என நம்புகிறோம்' என தெரிவித்துள்ளார்.
போனி கபூர் பகிர்ந்துள்ள இந்த செய்தியை அஜித் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.
ஆதிரா.