கமல் பட வெளியீட்டு விழாவில் ரஜினி

விக்ரம் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார்.
'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்திருக்க கூடிய திரைப்படம் 'விக்ரம்'. இந்த படம் அடுத்த மாதம் மூன்றாம் தேதி நேரடியாகத் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை நேரு உள் விளையாட்டரங்கில் தொடங்கியது. இசை வெளியீட்டிற்கு முன்பாகவே ஆல்பத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களின் பட்டியலை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டார்.
#Vikram tracks streaming this evening 🥁🥁🥁#VikramTrailer at 7pm 🥳🥳🥳
— Anirudh Ravichander (@anirudhofficial) May 15, 2022
Let’s go 🔥🔥🔥
Ulaganayagan @ikamalhaasan @DirLokesh @VijaySethuOffl #FahadhFaasil @Udhaystalin #Mahendran @RKFI @SonyMusicSouth @turmericmediaTM @anbariv @iamSandyOff @RedGiantMovies pic.twitter.com/bLy3nl9nC1
மொத்தம் 5 பாடல்களைக் கொண்டதாக விக்ரம் ஆல்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இசை வெளியீட்டு விழாவில் ரஜினியும் கலந்துகொள்கிறார்.
சிலம்பரசன் உள்ளிட்ட பிரபலங்கள் ஏற்கனவே விழா அரங்குக்கு வருகைத் தந்தனர்.
முன்னதாக இசை வெளியீட்டு விழாவுக்கு ரஜினி, விஜய், சூர்யா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
-பிரியா