மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 15 மே 2022

தியேட்டர்களில் தமிழ் திரைப்படங்கள்: ஆர்.கே.சுரேஷ் வேண்டுகோள்!

தியேட்டர்களில் தமிழ் திரைப்படங்கள்: ஆர்.கே.சுரேஷ் வேண்டுகோள்!

வரலட்சுமி சரத்குமார், ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்‌ஷா நடிப்பில், சுந்தர் பாலு தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘கன்னித் தீவு’.

இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா மே 13 அன்று சென்னையில் பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகரும், இயக்குநருமான தியாகராஜன், தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் பேரரசு, நடிகர், தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், மக்கள் தொடர்பாளர் விஜய முரளி, தயாரிப்பாளர் சஞ்சய் லால்வானி ஆகியோருடன் நடிகர் ராஜ்குமார், நடிகை சுபிக்‌ஷா, இயக்குநர் சுந்தர் பாலு, இசையமைப்பாளர் ராஜ் பிரதாப், ஒளிப்பதிவாளர் சிட்டி பாபு உள்ளிட்ட படக் குழுவினர் கலந்துக் கொண்டனர்.

இயக்குநரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் பேசும்போது, “நான் தினமும் தினத்தந்தியை கையில் எடுத்ததும் படிக்கும் முதல் விஷயமே ‘கன்னித் தீவு’தான். இதுவரை யாரும் இந்த தலைப்பை வைத்தது இல்லை. அது ஏன் என்று இதுநாள்வரை எனக்கு தெரியவில்லை. படத்தின் தலைப்பிலேயே இயக்குநர் வெற்றியடைந்து விட்டார். அனைவரையும் ஈர்க்கும் பெயரை கொண்ட இந்தக் ‘கன்னித் தீவு’ வெற்றியடைய வாழ்த்துக்கள்…” என்றார்.

இயக்குநரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் பேசுகையில், “ கடந்த 13 ஆண்டுகளாக என்னை இத்துறையில் ஆதரித்து வரும் அனைவருக்கும் நன்றி. ரூ.1000 கோடி பட்ஜெட்டில் படம் எடுப்பது சரியான வழிமுறை கிடையாது. தமிழகத்தில் இருக்கும் தியேட்டர்களில் 70 சதவிகித தியேட்டர்கள் தமிழ்ப் படங்களை மட்டுமே திரையிட வேண்டும். மற்ற மாநில மொழி படங்களுக்கு 30 சதவிகித தியேட்டர்களைத்தான் கொடுக்க வேண்டும். ‘பான் இந்தியா’ படம் என்கிறார்கள். அப்போது அதை ஓடிடியில் வெளியிடுங்கள். இப்படியே சென்றால் தமிழ் படங்கள் விரைவில் தோல்வியடைந்து விடும். படத்திற்கு பட்ஜெட்டைவிட கதைதான் முக்கியம். கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட எத்தனை படங்கள் வெற்றியடைந்துள்ளது என்று கூறுங்கள். புது இயக்குநர்கள் கதைகளை மையப்படுத்தி திரைப்படங்களை இயக்க வேண்டும். இது என்னுடைய வேண்டுகோள்” என்றார்.

-இராமானுஜம்

சினிமாவில் அறிமுகமாகும் செந்தில் மகன்!

2 நிமிட வாசிப்பு

சினிமாவில் அறிமுகமாகும் செந்தில் மகன்!

மாதவன் பேச்சு சர்ச்சையும் மயில்சாமி அண்ணாதுரை விளக்கமும்

9 நிமிட வாசிப்பு

மாதவன் பேச்சு சர்ச்சையும் மயில்சாமி அண்ணாதுரை விளக்கமும்

திரௌபதி முர்மு: சர்ச்சை கருத்துக்கு ராம்கோபால் வர்மா விளக்கம்! ...

3 நிமிட வாசிப்பு

திரௌபதி முர்மு: சர்ச்சை கருத்துக்கு ராம்கோபால் வர்மா விளக்கம்!

ஞாயிறு 15 மே 2022