ஐசரி வேலனின் சிலையைத் திறந்து வைத்த கமல்


நடிகரும், தமிழகத்தின் முன்னாள் துணை அமைச்சருமான அமரர் ஐசரி வேலனின் திருவுருவ சிலையை கமல்ஹாசன் நேற்று (மே 14) திறந்து வைத்தார்.
சென்னை அடையாறில் அமைந்துள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற ஐசரி வேலன் அவர்களின் 35ஆவது நினைவு நாள் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கமல்ஹாசன் ஐசரி வேலன் திருவுருவ சிலையைத் திறந்து வைத்தார்.
வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் மற்றும் வேல்ஸ் கல்வி குழுமத்தின் தலைவருமான டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் ‘இலவச குடும்ப சுகாதார அட்டை’ வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து நலிந்த நாடக நடிகர்களுக்கு வேல்ஸ் இலவச குடும்ப சுகாதார அட்டையுடன் புத்தாடைகளை வழங்கினார் கமல்ஹாசன்.