மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 15 மே 2022

ஐபிஎல்: ஹைதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!

ஐபிஎல்: ஹைதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!

ஐபிஎல் 2022 சீசனின் நேற்று (மே 14) நடைபெற்ற 61ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா - ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் கொல்கத்தா அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்தப் போட்டிக்கான டாஸில் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக வெங்கடேஷ் ஐயர் - ரஹானே களமிறங்கினர். தொடக்கத்தில் வெங்கடேஷ் ஐயர் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த நிதிஷ் ராணா, ரஹானேயுடன் இணைந்து சிறப்பாக விளையாடினார்.

இருவரும் நிலைத்து ஆடி ரன்களை சேர்த்தனர். அணியின் ஸ்கோர் 65 ரன்னாக இருந்தபோது ராணா 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு ரஹானே 28 ரன்களில் வெளியேறினார்.

பின்னர் வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர், ரிங்கு சிங்க் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 100 ரன்களுக்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்தது.

அடுத்து ரசல் - சாம் பில்லிங்ஸ் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். பில்லிங்ஸ் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் ரசல் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. ரசல் 28 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்து 178 ரன்கள் இலக்குடன் ஹைதராபாத் அணி விளையாடியது.

தொடக்க வீரர்களாக கேப்டன் கேன் வில்லியம்சன் - அபிஷேக் ஷர்மா களமிறங்கினர். தொடக்க விக்கெட்டுக்கு 30 ரன்கள் சேர்த்தனர். அதன்பிறகு வில்லியம்சன் 9 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த ராகுல் திரிபாதி 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் அபிஷேக் சர்மா மறுமுனையில் அபாரமாக விளையாடினர். பந்துகளை பவுண்டரி, சிக்ஸருக்கு பறக்கவிட்டார்.

சிறப்பாக விளையாடிய அவர் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பூரன் 2 ரன்களிலும், மார்க்ரம் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதன் பிறகு வந்த வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்தது. இதனால் கொல்கத்தா அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, குஜராத் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் இன்று (மே 15) நடைபெறுகின்ற 62ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை அணியுடன் மோதுகிறது.

63ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ அணியும் ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன. லக்னோ அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டால், பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்துவிடும்.

மும்பை, சென்னை அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து விட்டன. மீதமுள்ள ஆறு அணிகளும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற சூழல் உள்ளதால், இனிவரும் போட்டிகளில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

-ராஜ்-

லாபம் தருமா வெந்து தணிந்தது காடு’!

3 நிமிட வாசிப்பு

லாபம் தருமா வெந்து தணிந்தது காடு’!

சிறப்பு பார்வை: நெஞ்சுக்கு நீதி!

7 நிமிட வாசிப்பு

சிறப்பு பார்வை: நெஞ்சுக்கு நீதி!

கேன்ஸ் பட விழாவில் ரஞ்சித்தின் வேட்டுவம்!

2 நிமிட வாசிப்பு

கேன்ஸ் பட விழாவில் ரஞ்சித்தின் வேட்டுவம்!

ஞாயிறு 15 மே 2022