துஷ்யந்தின் ஷூட்டிங் ஸ்டார்!

entertainment

நடிகர்திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்தில் இருந்து சக்சஸ் படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் துஷ்யந்த்.

ராம்குமாரின் மகனான இவர் மச்சி என்ற படத்தில் நடித்தார். இரண்டு படங்களுமே வணிக ரீதியான வெற்றியை பெறவில்லை. பின்னர் சிவாஜி புரொடக்சன் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டார். பத்தாண்டுகளுக்கு பின் மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது

எம்.ஜே.ரமணன் இயக்கத்தில் ‘ஷூட்டிங் ஸ்டார்’ என்ற படத்தில் துஷ்யந்த் நடிக்கிறார். இவருடன் இந்தி மற்றும் போஜ்புரி படங்களில் நடித்து பிரபலமான ரவி கிஷானும் நடிக்கிறார்.
இவர்களுடன் ஸ்ரீனிவாஸ் ரெட்டி, விவேக் பிரசன்னா, மாசூம் சங்கர், ஆஸ்தா ஷரன், காஜல் சவுகான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில்(13.05.2022) நேற்று பூஜையுடன் ஆரம்பமானது.

“இந்த படத்தின் திரைக்கதை பிளாக் காமெடி வகையில் இருக்கும். அதேசமயம் படத்தின் இறுதிக்காட்சிகள் பார்வையாளர்களை கண்ணீரில் ஆழ்த்திவிடும்” என்று கூறியுள்ளார் இயக்குனர் எஸ்.ஜே.ரமணன்.

**இராமானுஜம்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *