மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 14 மே 2022

கமல் பட விழா: ரஜினி, விஜய், சூர்யாவுக்கு அழைப்பு?

கமல் பட விழா: ரஜினி, விஜய், சூர்யாவுக்கு அழைப்பு?

நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் பட இசைவெளியீட்டு விழாவுக்கு நடிகர் ரஜினிகாந்த், விஜய் ,சூர்யாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

'மாஸ்டர்' படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்திருக்க கூடிய திரைப்படம் 'விக்ரம்'. இப்படம் அடுத்த மாதம் மூன்றாம் தேதி நேரடியாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கமல்ஹாசன் எழுதி அனிருத் இசையில் பாடிய 'பத்தல பத்தல' என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற அதே சமயம் பாடலின் வரிகள் சர்ச்சைக்குள்ளானது.

இந்த நிலையில் படத்தின் மிக பிரமாண்டமான இசை வெளியீட்டு விழா மற்றும் படத்தின் முன்னோட்ட காட்சி வெளியீட்டு விழா சென்னையில் நேரு உள் விளையாட்டரங்கில் நாளை (மே 14) மாலை நடைபெற உள்ளது. இந்த படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது. இதனையடுத்து நாளை நடைபெற இருக்கும் பிரமாண்டமான இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசனின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்த பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், நடிகர் விஜய் மற்றும் நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிகிறது. கொரோனாவுக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் பெரிதாக எந்த பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் தவிர்த்து வருகிறார். நடிகர் விஜய்யும் தனது இசை வெளியீட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை மட்டுமே வழக்கமாக வைத்துள்ளார். அதனால் இவர்கள் 'விக்ரம்' இசை வெளியீட்டிற்கு வருவதை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இந்த படம் குறித்து, லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், 'நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான எனக்கு அவரை இயக்கிய என்னுடைய படத்தை பார்த்து விட்டு அவர் பாராட்டுவதற்கு நான் முப்பது வருடங்கள் காத்திருந்தேன்' என குறிப்பிட்டுள்ளார்.

ஆதிரா

சிம்பு தான் வேணும்: ஸ்ரீநிதி

4 நிமிட வாசிப்பு

சிம்பு தான் வேணும்: ஸ்ரீநிதி

இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்?

3 நிமிட வாசிப்பு

இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்?

மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கும் நிலை!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கும் நிலை!

சனி 14 மே 2022