மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 14 மே 2022

தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட ஐங்கரன்: உதவிய ஜி.வி.பிரகாஷ்

தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட ஐங்கரன்:  உதவிய ஜி.வி.பிரகாஷ்

ரவி அரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் படம் ஐங்கரன். விஜய்சேதுபதி நடித்த 'றெக்க' படத்தை தயாரித்த கணேஷ் தயாரித்திருக்கிறார்.

இப்படம் தயாராகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன.

கொரோனா பொது முடக்கம் காரணமாக படவெளியீடு தாமதமானது என்றாலும் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு திரையரங்குகள் முழுமையாக திறக்கப்பட்ட பின்னர், பல முறை வெளியீட்டு தேதிகள் அறிவிக்கப்பட்டு, இறுதி நேரத்தில் ரீலீஸ் ஒத்திவைக்கப்படும். காரணம், தயாரிப்பாளர் கணேஷ் வெவ்வேறு படங்களுக்கு பைனான்சியர்களிடம் வாங்கிய கடன்களை திருப்பித் தராததன் காரணமாக ஐங்கரன் படத்தை வெளியிட கடன் கொடுத்தவர்கள் அனுமதிக்கவில்லை. படம் நன்றாக வந்திருக்கிறது இப்படம் வெளியானால் நல்ல வசூல் கிடைக்கும் என்று தயாரிப்பாளர் சொன்னதை கடன் கொடுத்தவர்கள் ஏற்கவில்லை.

அதன்பின் தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் ஆகிய அமைப்புகள் இச்சிக்கலில் தலையிட்டு,ஒவ்வொன்றாகப் பேசி பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்திருக்கிறார்கள். இருந்தபோதும், கடைசியில் ஒரு கோடி தேவை எனும் நிலையில், நானே அந்த ஒரு கோடியைக் கொடுத்துவிடுகிறேன் என்று ஒப்புக்கொண்டு ஜி.வி.பிரகாஷ் கையெழுத்துப் போட்டதால் பிரச்சினை முடிக்கப்பட்டு மே 13 அன்றுபடம் வெளியாகியிருக்கிறது.

இந்தப்படத்துக்காகப் பேசப்பட்ட சம்பளத்தையே முழுமையாகப் பெறவில்லை, அதையும் விட்டுக் கொடுத்து அதற்கு மேலும் ஒரு கோடி ரூபாய்க்கு ஜீ.வி.பிரகாஷ் பொறுப்பேற்றதை தயாரிப்பாளர்கள் வட்டாரத்தில் பாராட்டி வருகின்றனர்.

-இராமானுஜம்

கமலை மிரட்டினேனா: உதயநிதி

8 நிமிட வாசிப்பு

கமலை மிரட்டினேனா: உதயநிதி

தசாவதாரம் 2: கே.எஸ்.ரவிகுமார் சொன்ன தகவல்!

4 நிமிட வாசிப்பு

தசாவதாரம்  2: கே.எஸ்.ரவிகுமார்  சொன்ன தகவல்!

ஐசரி வேலனின் சிலையைத் திறந்து வைத்த கமல்

2 நிமிட வாசிப்பு

ஐசரி வேலனின் சிலையைத் திறந்து வைத்த கமல்

சனி 14 மே 2022