மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 14 மே 2022

பிக்பாஸ் தாமரைக்கு வீடு கட்டித் தரும் ரசிகர்கள்!

பிக்பாஸ் தாமரைக்கு வீடு கட்டித் தரும் ரசிகர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த தாமரை செல்விக்கும் அவரது குடும்பத்திற்கும் ரசிகர்கள் பணம் திரட்டி தற்போது வீடு கட்டி தருகின்றனர்.

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தமிழில் ஐந்தாவது சீசனில் கலந்துகொண்டார் தாமரைச்செல்வி. நாடக கலைஞராக கிராமத்திலிருந்து தாமரைச்செல்வி உள்ளே வந்தார். பிரபலங்கள், பிரபலம் இல்லாதவர்கள், மாடல்கள், பாடகர்கள் என பிக்பாஸ் போட்டியாளர்கள் தேர்வு எப்போதுமே கலவையாக இருக்கும்.

அந்த வகையில் தாமரை செல்வியும் உள்ளே வந்தார். ஆரம்பத்தில் விளையாட்டில் தடுமாறினாலும் போக போக விளையாட்டினை புரிந்து கொண்டு இறுதி சுற்று வரை வந்தார். பிக்பாஸ் வீடு தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக கூறியவர் பிக்பாஸ் ஓடிடியிலும் கலந்து கொண்டார்.

இப்போது விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் அவரும் அவருடைய கணவர் பார்த்தசாரதியும் இருவரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.

தாமரை செல்வியின் குடும்பம், சொந்த ஊரில் இருக்க வீடு இல்லாமல் கூரை வீட்டில் வசித்து வருவதை பற்றி சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றில் ஒரு பேட்டி வெளியானது. இதை பார்த்த அவருடைய ரசிகர்கள் தாமரைச்செல்வி குடும்பத்திற்கு வீடு கட்டித்தர வேண்டும் என பணம் திரட்டியுள்ளனர்.

இதற்கான உதவியை செய்து தர வேண்டும் என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனிடமும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். தாமரைச் செல்வியின் ரசிகர்களுக்கும் தாமரைச்செல்விக்கும் இடையில் ஒரு பாலமாக இருந்து வீடு கட்டித்தரும் பணியை அவரது ரசிகர்கள சார்பாக முன்னெடுத்து செல்வதாக தன்னுடைய யூடியூப் சேனலில் தற்போது தெரிவித்திருக்கிறார் ஜேம்ஸ் வசந்தன்.

இதற்கான வீடியோ ஒன்றை தற்போது ஜேம்ஸ் வசந்தன் வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், ' தாமரைச் செல்வியின் குடும்பத்தையும் அவருடைய வீட்டையும் பேட்டியில் பார்த்த அவருடைய ரசிகர்கள் அவருக்கு ஒரு வீடு கட்டி தரவேண்டும் என ஆசைப்பட்டு அதற்கான பணத்தை ஒன்று திரட்டினர். 600 சதுர அடியில் ஒரு வீடு கட்டித்தர, திரட்டிய பணத்தை வைத்து முடிவு செய்தோம். அந்த வீட்டிற்கான வடிவமைப்பையும் பொறியியல் படித்த இளைஞர் ஒருவர் இலவசமாக செய்து தர முன் வந்தார்.

தற்போது அந்த வீடு பணியை ஆரம்பித்து இருக்கிறோம். தாமரைச் செல்வியின் சொந்த ஊரில் முன்னெடுக்கும் இந்த பணி குறித்து ஒவ்வொரு வாரமும் வீடு எந்த நிலையில் உள்ளது என்பதை உங்களுக்கு நாங்கள் தெரிவிப்போம். வீட்டிற்கு 'தாமரை இல்லம்' என பெயர் சூட்ட இருக்கிறோம். உங்களுக்கும் இது போல உதவி செய்ய விருப்பம் இருந்தால் அது குறித்து என்னுடன் தொடர்பு கொள்ளலாம்' என்று அந்த வீடியோவில் ஜேம்ஸ் வசந்தன் குறிப்பிட்டுள்ளார்.

ஆதிரா

சிம்பு தான் வேணும்: ஸ்ரீநிதி

4 நிமிட வாசிப்பு

சிம்பு தான் வேணும்: ஸ்ரீநிதி

இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்?

3 நிமிட வாசிப்பு

இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்?

மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கும் நிலை!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கும் நிலை!

சனி 14 மே 2022