மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 13 மே 2022

அதிக சம்பளம் கேட்ட அட்லீ: கூட்டணி முறிவு!

அதிக சம்பளம் கேட்ட அட்லீ: கூட்டணி முறிவு!

இயக்குநர் அட்லி, ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்.

அதன் பின்னர், விஜய் நடிப்பில் வெளியான தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று படங்களை இயக்கினார். மூன்று படங்களை தயாரித்த நிறுவனங்கள் படப்பிடிப்பு முடிவடையும்போது திட்டமிட்ட செலவை கடந்து கூடுதல் செலவு செய்துவிட்டார் இயக்குநர் அட்லி என்கிற குற்றசாட்டை கூறினாலும், அடுத்தடுத்து விஜய் நடிக்கும் படங்களை இயக்கும் வாய்ப்பை பெற காரணமாக இருந்தவர் நடிகர் விஜய்.

பிகில் படத்திற்கு பின் அட்லியை இயக்குநராக கொண்டு படங்கள் தயாரிக்க தயாரிப்பு நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை, நீண்ட நாட்களுக்கு பின் தற்போது ஷாருக்கான் - நயன்தாரா ஜோடி நடிக்கும் இந்தி படத்தை இயக்கி வருகிறார் அட்லி.

இந்நிலையில், தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுனுக்கு அட்லி கதை கூறியுள்ளார் கதை கரு பிடித்ததால்

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் அப்படத்தை தயாரிக்க திட்டமிடப்பட்டது.

இந்நிலையில் அட்லி கேட்ட அதிக சம்பளம் காரணமாக அந்தக்கூட்டணி முற்றிலும் முறிந்துவிட்டதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

அந்தப்படத்துக்காக 35 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார் அட்லி, அதுமட்டுமின்றி வியாபாரத்திலும் குறிப்பிட்ட சதவீத பங்கு வேண்டும் என்று கேட்டதே அல்லு அர்ஜூன் அட்லி கூட்டணி முறிவுக்கு காரணம் என்கின்றனர்.

-இராமானுஜம்

சிம்பு தான் வேணும்: ஸ்ரீநிதி

4 நிமிட வாசிப்பு

சிம்பு தான் வேணும்: ஸ்ரீநிதி

இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்?

3 நிமிட வாசிப்பு

இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்?

மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கும் நிலை!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கும் நிலை!

வெள்ளி 13 மே 2022