மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 13 மே 2022

'கனா காணும் காலங்கள்' சீரியலில் மற்றுமொரு பிரபலம்?

'கனா காணும் காலங்கள்' சீரியலில் மற்றுமொரு பிரபலம்?

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் 'கனா காணும் காலங்கள்' தொடரில் 'பாக்கியலட்சுமி' புகழ் ஆர்யன் ' வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியின் புகழ்பெற்ற 'கனா காணும் காலங்கள்' சீரியலின் மூன்றாவது சீசன் தற்போது ஓடிடியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் தான் ஆர்யன் வர இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் 'பாக்கியலட்சுமி' யும் ஒன்று. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

குடும்பத் தலைவிக்கான கதையாக வரும் இந்த சீரியலில் அனைத்து கதாப்பாத்திரங்களுமே ரசிகர்களிடையே பரிச்சயம்.

அந்த வகையில், கதாநாயகியான பாக்கியலட்சுமியின் மூத்த மகன் செழியன். இந்த கதாப்பாத்திரத்தில் ஆர்யன் நடித்து வந்தார். ஆர்யனுக்கு இந்த சீரியல் நல்ல புகழ் வெளிச்சம் கொடுத்தது.

சுயநலமாக தன் நலம் மட்டுமே யோசித்து சிடுசிடுவென இருக்கக்கூடியவன் செழியன். இந்த கதாப்பாத்திரம் அவருக்கு போதிய புகழ் வெளிச்சம் கொடுத்தாலும் இந்த கதாப்பாத்திரத்தில் தனக்கு போதுமான முக்கியத்துவம் இல்லை என கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த சீரியலை விட்டு விலகினார். அவருக்கு பதிலாக விகாஸ் என்பவர் இப்போது நடித்து வருகிறார். இந்த சீரியலை விட்டு விலகுவது தனக்கு வருத்தமாக இருக்கிறது எனவும் ஆரியன் பதிவிட்டு விகாஸ்ஸையும் தன் கதாப்பாத்திரத்திற்கு அறிமுகப்படுத்தினார்.

ஆர்யன் இந்த சீரியல் விட்டு விலகியதும் இவரும் இவரது மனைவியும் நடிகையுமான ஷபானாவும் இணைந்து ஜோடியாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு சீரியல் நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்தது. ஆனால், இன்னும் இது குறித்து தொலைக்காட்சி தரப்போ இரண்டு பேருமோ இன்னும் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் தான் இப்போது ஆர்யன், விஜய் டிவியின் ஓடிடி தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் 'கனா காணும் காலங்கள்' மூன்றாவது சீசனில் நடிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது.

ஏற்கனவே, இந்த சீரியலில் முதல் சீசனில் நடித்து புகழ்பெற்ற இர்ஃபான் இப்போது இதில் ஆசிரியராக எண்ட்ரி கொடுத்திருக்க ஆர்யனும் உள்ளே வர இருக்கிறார் என்ற தகவல் ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீரியலில் ஆர்யன் வருவது நிச்சயம் சீரியலுக்கான பார்வையாளர்களை இன்னும் அதிகரிக்க வைக்கும். ஆர்யனுடைய கதாப்பாத்திரம் என்ன, அவருடைய எண்ட்ரி எப்போது என்பது குறித்தான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

ஆதிரா

சிம்பு தான் வேணும்: ஸ்ரீநிதி

4 நிமிட வாசிப்பு

சிம்பு தான் வேணும்: ஸ்ரீநிதி

இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்?

3 நிமிட வாசிப்பு

இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்?

மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கும் நிலை!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கும் நிலை!

வெள்ளி 13 மே 2022