மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 13 மே 2022

நயன்தாரா படத்தைத் தயாரிக்கிறாரா தோனி - உண்மை என்ன?

நயன்தாரா படத்தைத் தயாரிக்கிறாரா தோனி - உண்மை என்ன?

கடந்த சில நாட்களாவே கிரிக்கெட்டர் தோனி தயாரிப்பில் நயன்தாரா நடிக்கிறார் என்ற தகவலுக்கு இப்போது தோனி தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

கிரிக்கெட்டர் தோனி சினிமாவில் தயாரிப்பு தரப்பில் முழு கவனம் செலுத்த இருப்பதாகவும் அதற்கான பொறுப்பை நடிகர் ரஜினிகாந்த்தின் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவரான சஞ்சய் தான் கவனிக்க இருக்கிறார் எனவும் தகவல் வந்தது. அதன்படி முதல் படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க அனிருத் இசையமைக்கிறார் எனவும் சொல்லப்பட்டது.

ரஜினியின் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவரான சஞ்சய் 'பேட்ட', 'தர்பார்' உள்ளிட்ட படங்களில் சில காட்சிகளில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் புதுமுக இயக்குநர் தோனி தயாரிப்பில் படம் இயக்குவார் என வெளியான செய்திக்கு தோனி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், 'சஞ்சய் என்ற பெயரில் யாருடனும் நாங்கள் வேலை செய்யவில்லை. அதுபோன்ற பெயரில் யாரையும் பணி அமர்த்தவும் இல்லை. அதனால், அது போல வரும் போலியான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். இருந்தாலும் இப்போது நாங்கள் பல வித்தியாசமான புராஜெக்ட்டுகளில் பணியாற்றி வருகிறோம். அது குறித்தான அதிகாரபூர்வ தகவல்களை விரைவில் உங்களுடன் பகிர இருக்கிறோம்' என தோனி என்டர்டெயின்மென்ட் தனது அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ஆனால், அந்த ட்வீட் போட்ட சிறிது நேரத்திலேயே அதை நீக்கியுள்ளது, மீண்டும் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆதிரா

சிம்பு தான் வேணும்: ஸ்ரீநிதி

4 நிமிட வாசிப்பு

சிம்பு தான் வேணும்: ஸ்ரீநிதி

இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்?

3 நிமிட வாசிப்பு

இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்?

மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கும் நிலை!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கும் நிலை!

வெள்ளி 13 மே 2022