மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 12 மே 2022

கமலுக்கு விட்டுக்கொடுத்த லெஜெண்ட் சரவணன்

கமலுக்கு விட்டுக்கொடுத்த லெஜெண்ட் சரவணன்

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் விஸ்வரூபம் படத்திற்கு பின் சமகால கலைஞர்களுடன் கமல்ஹாசன் நடித்து தயாரித்திருக்கும் படம் விக்ரம். அவருடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களின் வெற்றிக்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப்படம், ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்துக்கு, அனிருத் இசையமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜூன் 3 ஆம் தேதி வெளியீட்டுக்கு முன்பாக படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்ட வெளீயீட்டைப் பெரிய அளவில் நடத்த விரிவான ஏற்பாடுகளை கமல்ஹாசன் செய்து வந்தார்.

எனவே, மே 15 ஆம் தேதியன்று நேரு உள்விளையாட்டரங்கில் இவ்விழா நடக்கும் என அறிவித்துள்ளனர். அதற்காக நேரு உள்விளையாட்டரங்கை ஒப்பந்தம் செய்வதற்காகப் போன போது அதே தேதியில் தன் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை நடத்த ஒப்பந்தம் செய்திருந்தாராம் சரவணா ஸ்டோர்ஸ் லெஜெண்ட் சரவணன்.

மே 15தேதி விழா என்றால் அதற்கு முந்தைய 13,14 ஆகிய இரண்டு நாட்களையும் சேர்த்து மொத்தம் மூன்று நாட்கள் ஒப்பந்தம் செய்திருந்தாராம். முந்தைய நாட்களில் விழா முன்னோட்டம், பயிற்சி ஆகியவற்றிற்காக ஒப்பந்தம் செய்திருந்தாராம்.

இந்த தகவலறிந்து அதிர்ந்த கமல்ஹாசன், அவரிடம் பேசி எப்படியாவது அந்தத் தேதியை வாங்கிவிடுங்கள் என்று கேட்டிருக்கிறார். அதன்பின் படக்குழுவினர் அண்ணாச்சியைத் தொடர்பு கொண்டுபேச, கமல்ஹாசன் படம், ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடும் படம் என்பதால் தனது படத்தின் விழாவை வேறு தேதியில் நடத்திக்கொள்வதாக கூறி தான் முன்பதிவு செய்திருந்த நாட்களை விட்டுக்கொடுத்துவிட்டாராம்.

அவருடைய படத்தின் விழா மே மாதக் கடைசியில் நடைபெற உள்ளதாம். எதையும் தொலைநோக்கு பார்வையுடன் திட்டமிடுபவர் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் விழாவுக்கு குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு முன்பாகவாவது இதற்கான முயற்சியை எடுத்திருக்க வேண்டும் என்கின்றனர் கோடம்பாக்க வட்டாரத்தில்.

இராமானுஜம்

சினிமாவில் அறிமுகமாகும் செந்தில் மகன்!

2 நிமிட வாசிப்பு

சினிமாவில் அறிமுகமாகும் செந்தில் மகன்!

மாதவன் பேச்சு சர்ச்சையும் மயில்சாமி அண்ணாதுரை விளக்கமும்

9 நிமிட வாசிப்பு

மாதவன் பேச்சு சர்ச்சையும் மயில்சாமி அண்ணாதுரை விளக்கமும்

திரௌபதி முர்மு: சர்ச்சை கருத்துக்கு ராம்கோபால் வர்மா விளக்கம்! ...

3 நிமிட வாசிப்பு

திரௌபதி முர்மு: சர்ச்சை கருத்துக்கு ராம்கோபால் வர்மா விளக்கம்!

வியாழன் 12 மே 2022