மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 12 மே 2022

அதிரடி ஆக்சன் காட்சிகளில் மோகன்

அதிரடி ஆக்சன் காட்சிகளில் மோகன்

கோயம்புத்தூர் எஸ்.பி.மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் தயாரிப்பில், இயக்குநர் விஜய்ஸ்ரீயின் இயக்கத்தில், தமிழ் சினிமாவின் வெள்ளி விழா படங்களின் நடிகர் மோகன் நடித்திருக்கும் புதிய படம் ‘ஹரா'.

லியாண்டர் லீ மார்ட்டி படத்திற்கு இசையமைக்க, மனோ தினகரன் மற்றும் பிரஹாத் முனியசாமி ஒளிப்பதிவை மேற்கொள்கின்றனர்.

இதுவரை மோகனை பல்வேறு கதாபாத்திரங்களில் பார்த்து ரசித்துள்ளனர். ஹரா’ படத்தில் அவரது கதாபாத்திரம் மிகவும் பேசப்படும் என்று படக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே முதலுதவி, ‘குட் டச்’, ‘பேட் டச்’ உள்ளிட்டவற்றை குழந்தைகளுக்கு சொல்லித் தருவது போல, ‘ஐ.பி.சி.’ சட்டங்களையும் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே இந்த படத்தின் முக்கிய கருத்தாகும்.

சமீபத்தில் இந்தப் படத்தின் சிறப்புக் காணொலி(கிளிம்ப்ஸ்) சென்னை எத்திராஜ் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

மோகன் இதுவரை நடித்து வெளியான படங்களில் இடம் பெறாத அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்திருக்கிறாராம். சில வாரங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட இந்த ‘ஹரா’ படத்தின் டைட்டில் டீசர் 14 லட்சம் பார்வைகளை கடந்த நிலையில், கிளிம்ப்ஸும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

படத்தை 2022 தீபாவளி அன்று திரைக்கு கொண்டு வர இயக்குநர் விஜய்ஸ்ரீ தலைமையிலான படக் குழுவினர் பணியாற்றி வருகின்றனர்.

-அம்பலவாணன்

சினிமாவில் அறிமுகமாகும் செந்தில் மகன்!

2 நிமிட வாசிப்பு

சினிமாவில் அறிமுகமாகும் செந்தில் மகன்!

மாதவன் பேச்சு சர்ச்சையும் மயில்சாமி அண்ணாதுரை விளக்கமும்

9 நிமிட வாசிப்பு

மாதவன் பேச்சு சர்ச்சையும் மயில்சாமி அண்ணாதுரை விளக்கமும்

திரௌபதி முர்மு: சர்ச்சை கருத்துக்கு ராம்கோபால் வர்மா விளக்கம்! ...

3 நிமிட வாசிப்பு

திரௌபதி முர்மு: சர்ச்சை கருத்துக்கு ராம்கோபால் வர்மா விளக்கம்!

வியாழன் 12 மே 2022