மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 10 மே 2022

இதயத்தை திருடாதே தொடர் ஹீமா பிந்து விலகலா?

இதயத்தை திருடாதே தொடர் ஹீமா பிந்து விலகலா?

'இதயத்தை திருடாதே' சீரியல் கதாநாயகியான ஹீமா பிந்து திடீரென அதில் இருந்து விலகி இருப்பதாக செய்திகள் வந்த நிலையில் சீரியல் முடிவுக்கு வருகிறதா என்ற குழப்பம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதனை ஹீமாவே தெளிவுபடுத்தி இருக்கிறார்.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது 'இதயத்தை திருடாதே' சீரியல். இதில் கதாநாயகனாக நடிகர் நவீனும் கதாநாயகியாக ஹீமாவும் நடித்து வந்தனர்.

முதல் சீசன் வெற்றிகரமாக ஓடி இருவருக்குமே ரசிகர்களிடையே பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது. இருவருக்கும் இதுதான் முதல் சீரியல். முதல் சீசன் முடிவடைந்த நிலையில் தற்போது 'இதயத்தை திருடாதே' சீரியலின் இரண்டாவது பாகம் கலர்ஸ் தமிழில் இரவு ஒளிபரப்பாகி வருகின்றது. 2020ம் வருடம் ஆரம்பித்த இந்த சீரியல் இரண்டு வருடங்களை கடந்து இப்போது வரை 1000 எபிசோட்டுகளை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் நவீனுக்கும் செய்தி வாசிப்பாளரான கண்மணியுடன் நிச்சயதார்த்தம் நடந்த, நிலையில் தற்போது 'இதயத்தை திருடாதே' சீரியலில் இருந்து ஹீமா பிந்து விலகியிருப்பது ரசிகர்களிடையே கேள்வியை எழுப்பியுள்ளது. ஏனெனில், தொடரில் மட்டுமல்லாது நிஜத்திலும் நவீனும் ஹீமாவும் காதலித்து வந்தனர் என சொல்லப்பட்டது. ஆனால், இருவருமே அதை தங்களுடைய சமீபத்திய பேட்டிகளில் மறுத்து தங்களுக்குள் நல்ல நட்பு மட்டும் தான் இருக்கிறது என கூறி இருந்தனர்.

சீரியலில் இருந்து இப்போது ஹீமா விலகியது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில், 'கடந்த இரண்டு வருடங்களாக சஹானாவாக எனது பயணத்தில் உடன் இருந்த அனைவருக்கும் நன்றி. தினமும் பள்ளிக்கு செல்வதை போல உற்சாகமாகவே படப்பிடிப்பு தளத்துக்கு கிளம்பி செல்வேன்.

உங்களை போலவே எனக்கும் சஹானா கதாப்பாத்திரம் மிகவும் நெருக்கமானது. நிச்சயம் சஹானா கதாபாத்திரத்தை மிஸ் செய்வேன். சஹானா கதாபாத்திரம் சரியான விஷயத்திற்காக மிகவும் தைரியமாக நேர்மையாக சண்டை போடக்கூடிய பெண். என்னுடைய உண்மையான கதாபாத்திரத்தின் இன்னொரு வடிவம்தான் சஹானா. சஹானா கதாபாத்திரத்தின் தாக்கம் என்னுள் நிறைய இருக்கிறது.

கடைசி வரை அதை நான் மறக்க மாட்டேன். என்றிருந்தாலும் அந்த சீரியல் ஒருநாள் முடிவடைய தான் போகிறது அதை நான் இப்போதே செய்துள்ளேன். நிறைய ரசிகர்கள் நான் அந்த சீரியலை விட்டு விலகுவது குறித்து வருத்தம் தெரிவித்து இருந்தார்கள் விரைவில் அடுத்த சீரியல் மூலம் அவர்களது அன்புக்கு நியாயம் செய்வேன்' என கூறியுள்ளார்.

இதனை அடுத்து சீரியல் முடிய போகிறது கதையில் மாற்றம் என்றெல்லாம் சொல்லப்பட்ட நிலையில் சீரியல் முடிய இருப்பதை ஹீமாவே தெளிவுப்படுத்தி இருக்கிறார்.

ஆதிரா

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

செவ்வாய் 10 மே 2022