மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 10 மே 2022

'என் வாழ்வின் புது அத்தியாயம்: நமீதா நெகிழ்ச்சி!

'என் வாழ்வின் புது அத்தியாயம்: நமீதா நெகிழ்ச்சி!

நடிகை நமீதா தன்னுடைய பிறந்தநாள் அன்று தான் தாய்மை அடைந்திருக்கும் செய்தியை பகிர்ந்திருக்கிறார்.

நடிகை நமீதா இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். குஜராத்தை சேர்ந்த இவர்

2004ம் வருடம் நடிகர் விஜயகாந்த் நடித்த 'எங்கள் அண்ணா' திரைப்படம் மூலமாக கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார்.

பின்பு 'ஏய்', 'பில்லா', 'அழகிய தமிழ் மகன்', 'வியாபாரி', 'நான் அவனில்லை' உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாகவும் சிறு கதாப்பாத்திரங்களிலும் நடித்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்திருக்கிறார்.

பெரிய திரையில் மட்டுமல்லாது, 'மானாட மயிலாட' போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவர், 'பிக்பாஸ்' முதல் சீசனில் போட்டியாளர் என தொலைக்காட்சி பக்கமும் கவனம் செலுத்தினார் நமீதா. இதுமட்டுமல்லாது கடந்த 2019-ம் ஆண்டு தமிழக பாஜக-வில் இணைந்து அதிரடி காட்டினார் நமீதா.

நமீதாவுக்கும் அவரது நண்பரான வீரேந்தர் என்பவருக்கும் 2017-ல் திருமணம் நடந்தது.

திருமணம் ஆகி நான்கு வருடங்கள் கடந்துள்ள நிலையில் இப்போது தான் அம்மாவாகி இருப்பதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களோடு பகிர்ந்திருக்கிறார் நமீதா.

இந்த பயணம் பற்றி அவர், “இதை தன் வாழ்வின் புது அத்தியாயம்” என்று சொல்லி இருக்கிறார். மேலும், 'என் வாழ்வின் புதிய அத்தியாயம் தொடங்கும் போது என்னுள் என்னை அறியாமலேயே புதிய ஒரு மாற்றம் வந்திருக்கிறது. ஒரு பிரகாசமான சூரிய ஒளி என் மீது பட்டு புது வாழ்வுக்கு ஒரு புதிய தொடக்கத்திற்கு என்னை அழைக்கிறது.

இது தான் என் வாழ்வில் நான் வேண்டும் என நினைத்து இத்தனை நாட்கள் வேண்டி கொண்டது. என் வயிற்றில் குழந்தையின் அசைவு அது என்னை உதைப்பது என எல்லாம் என்னால் உணர முடிகிறது.

முன்னெப்போதும் இல்லாதபடிக்கு என்னை நீ மாற்றி இருக்கிறாய். இது போல இனி எப்போதும் இருக்க என்னை மாற்றி இருக்கிறாய்' என மகிழ்சியாக தெரிவித்துள்ளார்.

நமீதாவின் இந்த செய்திக்கு, நடிகை குஷ்பு 'வாழ்த்துகள் டியர்! கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும்!! தாய்மை ஒரு அருமையான பயணம். ஒவ்வொரு நொடியையும் மகிழ்ச்சியாக கொண்டாடு!' என வாழ்த்தி இருக்கிறார்.

விஜே அஞ்சனாவும் தனது வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறார். இவர்கள் மட்டுமல்லாது, பல பிரபலங்களும் ரசிகர்களும் நமீதாவுக்கு தங்கள் வாழ்த்துகளை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

-ஆதிரா

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

5 நிமிட வாசிப்பு

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

3 நிமிட வாசிப்பு

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

செவ்வாய் 10 மே 2022