மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 10 மே 2022

ஐபிஎல்: 52 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா!

ஐபிஎல்: 52 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா!

15ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று (மே 9) நடைபெற்ற 56ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் 52 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய வெங்கடேஷ் அய்யரும், ரஹானேவும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். வெங்கடேஷ் அய்யர் 43, ரஹானே 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த நிதிஷ் ரானா அதிரடியாக விளையாடி 43 ரன்கள் எடுத்தார்.

அணியின் தொடக்கம் சிறப்பாக அமைந்ததால், அதிக ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. மும்பை அணி தரப்பில் பும்ரா நான்கு ஓவர்கள் வீசி 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

இதையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி பேட்டிங் செய்தது. முதலில் களமிறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய இஷான் கிஷான் 51 ரன்கள் எடுத்தார். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

113 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மும்பை அணி 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதையடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இன்று (மே 10) நடைபெறும் 57ஆவது லீக் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் லக்னோ அணியும் குஜராத் அணியும் மோதுகின்றன.

-ராஜ்-

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

செவ்வாய் 10 மே 2022